படிப்பை பாதியிலேயே நிறுத்திய சிறுவன் செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த போது ராஜபாளையம் தாட்கோ காலனியை சேர்ந்த மகாலட்சுமி(33) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருக்கும் அந்த பெண் சிறுவனைக் காதலித்து வந்துள்ளார். சிறுவனும், அந்த பெண்ணைக் காதலித்ததாக கூறப்படுகிறது.
விருதுநகர் அருகே 17 வயது சிறுவனுடன் 33 வயது பெண் வீட்டை வீட்டு வெளியேறி ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண்ணை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த சேத்தூரை சேர்ந்த 17 வயது சிறுவன் வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மாயமான சிறுவன் கன்னியாகுமரியில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் சிறுவனை மீட்டு அவனோடு தங்கியிருந்த 33 வயதான பெண்ணையும் அழைத்துவந்தனர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. அதில், படிப்பை பாதியிலேயே நிறுத்திய சிறுவன் செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த போது ராஜபாளையம் தாட்கோ காலனியை சேர்ந்த மகாலட்சுமி(33) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருக்கும் அந்த பெண் சிறுவனைக் காதலித்து வந்துள்ளார். சிறுவனும், அந்த பெண்ணைக் காதலித்ததாக கூறப்படுகிறது. அடிக்கடி தனிமையில் உல்லாசமாகவும் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், இருவரும் வீட்டில் இருந்து வெளியேறி கன்னியாகுமரிக்கு தப்பி சென்றுவிட்டனர். சிறுவனைப் பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ததற்காக அந்த பெண் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.