தீராத பகை ஆறாத ரணம்...!! ஊர் நாட்டான்மையை நடுத்தெருவில் வைத்து போட்டுத்தள்ளிய கொலைவெறி கும்பல்...!!

Published : Jan 29, 2020, 12:21 PM IST
தீராத பகை ஆறாத ரணம்...!!   ஊர் நாட்டான்மையை நடுத்தெருவில் வைத்து போட்டுத்தள்ளிய கொலைவெறி கும்பல்...!!

சுருக்கம்

அப்போது அங்கு திரண்ட ஊர் பொதுமக்கள் குற்றவாலிகளை கைது செய்யும் வரை  உடலை எடுக்கவிடமாட்டோம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர் . 

இராஜபாளையம் அருகே தேசிகாபுரம் பகுதியில் ஊர் நாட்டாமை வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவரது  உடலை எடுக்கவிடாமல் ஊர் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால்  பரபரப்பு ஏற்பட்டது .   விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தேசிகாபுரம் பகுதியில் மேல தெருவை சேர்ந்த பாலசுப்பு என்பவரின் மகன் தங்கவேல் வயது ( 57)  இவர் தேசிகாபுரம் வடக்குத்தெரு ஊர் நாட்டாமை ஆவார் .  கடந்த சில வருடங்களாகவே தேசிகாபுரத்தில் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இரு பிரிவாக செயல்பட்டு வருகின்றனர் . 

இந்நிலையில்  நேற்று மாலை தங்கவேல் ,  வீட்டிற்கு அருகே உள்ள தனது நிலத்தில்  விவசாய வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்,  தேசியம்மன்  கோவில் அருகே வந்தபோது ,  எதிரில் வந்த  அடையாளம் தெரியாத மர்மகும்பல் தங்கவேலை சுற்று வளைத்து  தாங்கள் வைத்திருந்த   பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக  வெட்டினர். அதை இடத்தில்  ரத்த வெள்ளத்தில் சரிந்த தங்கவேல் துடிதுடித்து உயிரிழந்தார்.  இதனையடுத்து தகவல் அறிந்து வந்த   தளவாய்புரம் போலீஸ்சார் , வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயற்சி செய்தனர் .   அப்போது அங்கு திரண்ட ஊர் பொதுமக்கள் குற்றவாலிகளை கைது செய்யும் வரை  உடலை எடுக்கவிடமாட்டோம் என கூறி போராட்டத்தில்  ஈடுபட்டனர் . 

அங்கு வந்த  ஏடிஎஸ்பி மாரிராஜன் மற்றும் ராஜபாளையம் டிஎஸ்பி நாகசங்கர்   குற்றவாளிகளை உடனடியாக கைது செய்வதாக  உறுதியளித்தார் , அதன்பின்னரே  உடலை எடுத்துச் செல்ல உறவினர்களும் பொதுமக்களும் ஒத்துழைப்பு அளித்தனர் .  இந்நிலையில் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார்,   கொலையாளிகளை தேடும் பணியில் தீவிரமான ஈருபட்டு வருகின்றனர் . முன்பகை  காரணமாகவும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும்  கொலை நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது குறிப்பிட தக்கது.  

PREV
click me!

Recommended Stories

பெற்ற குழந்தையை கொன்ற கொடூர தாய்.. கோர்ட் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு.. கள்ளக்காதலன் எஸ்கேப்..
லெஸ்பியன் உறவு! மால்தி தேவியுடன் மனைவி உல்லாசம்! நேரில் பார்த்த கணவர்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!