100 சதவீதம் கடனை திருப்பிச் செலுத்த தயார் !! லண்டனில் ஒளிந்துள்ள விஜய் மல்லையா வங்கிகளுக்கு வேண்டுகோள் !!

Published : Dec 05, 2018, 10:54 AM IST
100 சதவீதம் கடனை திருப்பிச் செலுத்த தயார் !!  லண்டனில் ஒளிந்துள்ள விஜய் மல்லையா வங்கிகளுக்கு வேண்டுகோள் !!

சுருக்கம்

மது தொழிற்சாலைகள் மற்றும் கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனங்களில் ஏற்பட்ட கடும் இழப்பு காரணமாக தான் வங்கிகளில்  பெற்ற கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் போனதாகவும், தற்போது  கடனை 100 சதவீதம் திருப்பிச் செலுத்த தயாராக உள்ளதாகவும் தொழிலதிபர் விஜய் மல்லையா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, இந்திய வங்கிகளிடம் ஆயிரக்கணக்கான கோடி கடனை பெற்றுவிட்டு அதை திருப்பிச் செலுத்தாமல், லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளார். வங்கிகளுக்கு தர வேண்டிய பாக்கியை வட்டியுடன் விஜய் மல்லையா செலுத்தியே தீர வேண்டும் என்று கர்நாடகாவில் உள்ள கடன் மீட்பு தீர்ப்பாயம் உத்தரவிட்டது. 

இதன் படி, விஜய் மல்லையாவிடம் ரூ.10 ஆயிரம் கோடி பாக்கியை வசூலித்து தரும்படி, 13 இந்திய வங்கிகள், இங்கிலாந்து ஐகோர்ட்டின் வணிக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. ஆனால், விஜய் மல்லையாவோ, உலகம் முழுவதும் தனது சொத்துகளை முடக்கும் உத்தரவை ரத்து செய்யக் கோரினார். ஆனால், அவரது கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார். 

இந்த நிலையில், வங்கி கடன் விவகாரம் தொடர்பாக கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 இல் பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு கடிதம் எழுதினேன். ஆனால், எந்த பதிலும் கிடைக்கவில்லை. கிங்பிஷர் விமான நிறுவனத்திற்கு கடன் வாங்கி கொண்டு நாட்டை விட்டு ஓடிவிட்டதாக அரசியல்வாதிகளும், மீடியாக்களும் என் மீது குற்றஞ்சாட்டின. வேண்டுமேன்றே கடனை திருப்பி செலுத்தவில்லை என வங்கிகளும் குற்றம் சாட்டின.

அரசு மற்றும் வங்கிகள் சார்பாக, என் மீது தவறான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத குற்றச்சாட்டுகளை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை பதிவு செய்தன. எனக்கு சொந்தமான நிறுவனங்களின் சொத்துகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே  விஜய் மல்லையா இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் தான் பெற்ற கடன்களை 100 சதவீதம் திரப்பித் தர தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். அதில் மது தொழிற்சாலைகள் மற்றும் கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனங்களில் ஏற்பட்ட கடும் இழப்பு காரணமாக தான் வங்கிகளில்  பெற்ற கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் போனதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 30 ஆண்டுகளாக மது  தொழிற்சாலைகள் மூலம் பல்லாணிரக்கணக்கான கோடி ரூபாய் மாநிலங்களுக்கு  வரியாக செலுத்தியுள்ளதாகவும், ஏர்லைன்ஸ் நிறுவனம் மூலமும் அரசுக்கு வருவாய் ஈட்டித் தந்ததாகவும் மல்லையா குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வங்களில் தான் பெற்ற கடன்களை 100 சதவீத்ம் திருப்பித் தர தயாராக உள்ளதாகவும் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த  வாரம் கடன்கன் முழுவதையும் திருப்பிச் செலுத்த தயாராக இருப்பதாக தனது வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்துக்கு தெரிவித்திருந்தார்.

 

PREV
click me!

Recommended Stories

சார், எமர்ஜென்சி... கடிதம் எழுதி வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட முன்னாள் போலீஸ் ஐஜி..! பகீர் பின்னணி..!
அங்கிள் இப்படியெல்லாம் செய்யாதீங்க ரொம்ப தப்பு.. கதறிய 12 வயது சிறுமி.. விடாத கொடூரன்.!