பெண்கள் விடுதியில் பெட் ரூமில், பாத் ரூமில் ரகசிய கேமரா வைத்து நிர்வாணப்படம்... ஹாஸ்டல் ஓனரின் அந்தரங்கம்

Published : Dec 04, 2018, 01:20 PM IST
பெண்கள் விடுதியில் பெட் ரூமில், பாத் ரூமில் ரகசிய கேமரா வைத்து நிர்வாணப்படம்... ஹாஸ்டல் ஓனரின் அந்தரங்கம்

சுருக்கம்

பெண்கள் தங்கும் விடுதியில் யாருக்கும் தெரியாமல் ரகசிய கேமரா பொறுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  போலீசார் அதிரடியாக நடத்திய சோதனையில் அதிநவீன ரகசிய கேமராக்களை கண்டுபிடித்துள்ளனர்.

வேலைக்காகவும், படிப்பிற்காகவும்  சென்னைக்கு வரும் பெண்கள் தனியார் விடுதியில் தங்கியுள்ளனர்.  இந்நிலையில், சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் முதல் தெருவில் பெண் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த பெண்கள் விடுதியை சஞ்சீவ் என்பவர் நடத்தி வருகிறார். இந்த விடுதியில் உள்ள பெண்கள் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். 

இந்த பெண்கள் அவ்வப்போது சீரமைப்பு பணிகளும் நடைபெற்றது. ஆனால் தொடர்ந்து சீரமைப்பு பணிகள் செய்வதாக கூறி அடிக்கடி ஏதேதோ செய்துள்ளார் சஞ்சீவ். இதனையடுத்து விடுதியில் தங்கியிருந்த பெண்களுக்கு திடீரென சந்தேகம் ஏற்பட்டது. விடுதியில் எங்காவது ரகசிய கேமரா வைக்கப்பட்டிருக்கிறதோ என்பது குறித்து ஆராய தொடங்கினர். 

இதனையடுத்து தங்களது மொபைலில் உள்ள செல்போன் செயலி ஹிட்டன் கேமரா டிடக்டர் மூலம் விடுதி அறையில் ரகசிய கேமராக்கள் இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். இதனை கண்டு மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர். யாருக்கும் தெரியாமல் கழிவறை, படுக்கையறை, துணி மாட்டும் கைப்பிடி (ஆங்கர்) உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கண்களுக்கு தெரியாத சிறிய அளவிலான ரகசிய கேமராக்களை சஞ்சீவ் வைத்திருந்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக உடனே ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து எந்த கெடுகெட்ட செயலில் ஈடுபட்ட சஞ்சீவ் என்பவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.  

PREV
click me!

Recommended Stories

சார், எமர்ஜென்சி... கடிதம் எழுதி வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட முன்னாள் போலீஸ் ஐஜி..! பகீர் பின்னணி..!
அங்கிள் இப்படியெல்லாம் செய்யாதீங்க ரொம்ப தப்பு.. கதறிய 12 வயது சிறுமி.. விடாத கொடூரன்.!