விடுதலை சிறுத்தை பிரமுகர் கொடூரமாக வெட்டி கொலை... மதுராந்தகத்தில் பதற்றம்..!

Published : Aug 14, 2019, 03:29 PM IST
விடுதலை சிறுத்தை பிரமுகர் கொடூரமாக வெட்டி கொலை... மதுராந்தகத்தில் பதற்றம்..!

சுருக்கம்

மதுராந்தகம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த சூணாம்பேடு காலனியை சேர்ந்தவர் பூபாலன். இவரது மகன் வேலு (30) விடுதலை சிறுத்தைகள் கட்சியில் கிளை செயலாளராக உள்ளார். நேற்று இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற வேலு பின்னர் திரும்பி வரவில்லை. அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடி வந்தனர். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். 

இந்நிலையில், இன்று காலை சூணாம்பேடு ஏரிக்கரையில் வேலு படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வேலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

வேலு முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமாக என்பது குறித்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

ஐசியூ-வில் இருந்த 29 வயது இளம்பெண் அலறி கூச்சல்.. 3 மாதத்திற்கு பிறகு வெளிவந்த அதிர்ச்சி தகவல்
புதுச்சேரியில் சிறுமையை சீரழித்த 2 கிரிக்கெட் வீரர்கள்..! ரூமில் பாலியல் சேட்டை..! விரட்டியடித்த ஹோட்டல் நிர்வாகம்