கல்யாணமான 4 மாசத்தில் பிறந்த குழந்தை, சந்தேகப்பட்ட கணவன்! பிஞ்சு குழந்தை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்....

By sathish kFirst Published Aug 14, 2019, 11:14 AM IST
Highlights

திருமணமான 4 மாதத்தில் பெற்ற குழந்தையை கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டதால்  தாய் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமான 4 மாதத்தில் பெற்ற குழந்தையை கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டதால்  தாய் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பகுதியை சேர்ந்தவர் சம்சுதீன். இவரது மகள் சப்னாமோல்க்கு கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த முஜீப்ரகுமான் என்பவருடன் கடந்த மார்ச் மாதம் திருமணம் நடந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் பாலக்காட்டில் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் சப்னாமோல் கர்ப்பமானார். மேலும் திருமணம் ஆன 4 மாதங்களிலேயே சப்னாமோலுக்கு பெண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து சப்னாமோல் கடந்த சில நாட்களுக்கு முன் தனது குழந்தையுடன் பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லிவிட்டு சப்னாமோலின் பெற்றோர் கூடலூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். குழந்தை இறந்ததில் சந்தேகம் அடைந்த கிராம நிர்வாக அலுவலர் சுனீல் நியூகோப் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்த குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் குழந்தையின் தாய் சப்னாமோலிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். போலீசில் சப்னாமோல் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

கடந்த மார்ச் மாதம் தான் எனக்கு பாலக்காட்டை சேர்ந்த முஜீப்ரகுமானுடன் திருமணம் நடந்தது. திருமணம் ஆகி 4 மாதங்களிலேயே குழந்தை பிறந்ததால் என் கணவருக்கு என்மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனால் எங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் நான் எங்களது சண்டைக்கு காரணமான குழந்தையை கொல்ல முடிவு செய்தேன். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன் எனது பெற்றோர் வீட்டிற்கு வந்தேன். சம்பவத்தன்று வீட்டில் இருந்த குழந்தையை போர்வையால் முகத்தில் அழுத்தி கொலை செய்தேன் என்றார். இதையடுத்து போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

click me!