திருமணத்தை மீறிய உறவில் பிரச்சனை… ஆத்திரத்தில் எடுத்த முடிவால் சோகம்!!

By Narendran S  |  First Published Oct 28, 2022, 7:02 PM IST

வேலூர் அருகே உயிரிழந்த கொலைக் குற்றவாளி ரமேஷின் உடலைப் பெற குடும்பத்தினர் மறுத்ததை அடுத்து போலீஸாரே இறுதிச் சடங்குகளை மேற்கொண்டு நல்லடக்கம் செய்தனர். 


வேலூர் அருகே உயிரிழந்த கொலைக் குற்றவாளி ரமேஷின் உடலைப் பெற குடும்பத்தினர் மறுத்ததை அடுத்து போலீஸாரே இறுதிச் சடங்குகளை மேற்கொண்டு நல்லடக்கம் செய்தனர். வேலூர் முள்ளிபாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ். 48 வயதான இவர், திலகவதி என்ற பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார். திலகவதிக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் இருவரும் குடியாத்தத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்பதால் ரமேஷுக்கு சிறுவயதில் இருந்தே திலகவதியை அவளைத் தெரியும்.

இதையும் படிங்க: மாணவரின் தாய்க்கு பாலியல் தொல்லை.! மீண்டும் சூடுபிடித்த சிவசங்கர் பாபா பாலியல் வழக்கு - அடுத்தடுத்து அதிரடி

Latest Videos

ஆகவே அவர்கள் ஒருவரையொருவர் பல ஆண்டுகளாக ரகசியமாக சந்தித்து வந்துள்ளனர். இதனிடையே குற்ற உணர்ச்சி காரணமாக தனது கள்ளக்காதலை முறித்துக்கொள்ள முடிவு செய்தார். அதை ஏற்க முடியாத, ரமேஷ், திலகவதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ரமேஷ் திலகவதி மீது பெட்ரோலை ஊற்றி எரித்தார். எரிந்து கொண்டிருந்த திலகவதி ரமேஷை இறுக்க அணைத்துக்கொண்டார். இதில் 95% தீக்காயங்களுடன் திலகவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையும் படிங்க: ரயில் முன் தள்ளிவிட்டு மாணவி கொலை..! சத்யா இறந்து போவார்னு நினைக்கலை- கொலையாளி சதீஷ் பரபரப்பு வாக்குமூலம்

ரமேஷ் 50% தீக்காயங்களுடன் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தர். போலீசார் ரமேஷ் மீது ஐபிசி பிரிவு 302ன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்தனர். அவர் அக்டோபர் 21 ஆம் தேதி இறந்துவிட்டதாக போலீஸார் தெரிவித்தனர். ஆனால் அவரது குடும்பத்தினர் உடலை வாங்க மறுத்துவிட்டனர். இதை அடுத்து காவல்துறையினரே நடைமுறைகளை பின்பற்றி இறுதி சடங்குகளை செய்து அவரது உடலை அடக்கம் செய்தனர்.

click me!