ஐசியுவில் இருந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்த காமக்கொடூரன்கள்...!

Published : Nov 04, 2018, 05:07 PM IST
ஐசியுவில் இருந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்த காமக்கொடூரன்கள்...!

சுருக்கம்

தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண்ணை, மருத்துவமனை ஊழியர் உட்பட 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்தனர்.

தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண்ணை, மருத்துவமனை ஊழியர் உட்பட 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்தனர்.

கடந்த 5 நாட்களுக்கு முன், 17 வயது இளம்பெண், தங்களது பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்தபோது, பாம்பு கடித்தது. இதையடுத்து பொதுமக்கள் அவரை மீட்டு, உத்தரபிரதேச மாநிலம், பரேலியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஐசியு வார்ட்டில் இளம்பெண்ணை அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 

குடும்பத்துக்குச் சொந்தமான பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்த போது அவரை பாம்பு கடித்தது. இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் மட்டும் அந்த வார்டில், சிகிச்சை பெற்று வந்தார். இதை பயன்படுத்தி, மருத்துவமனை ஊழியர் உள்பட 4 பேர், கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். 

பின்னர் சாராண வார்டுக்கு மாற்றப்பட்ட பின், அந்த இளம்பெண் தனக்கு நேர்ந்த கொடுமையைப் போலீசாரிடம் கூறி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், மருத்துவமனையின் சிசிடிவி காமரா பதிவுகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் விசாரித்தபோது, மருத்துவமனை சீருடை அணிந்த ஒருவரும் மற்ற 4 பேரும், தான் தனியாக இருந்தபோது இரவில் நுழைந்துள்ளனர். ஊசி மருந்து ஒன்றை வலுக்கட்டாயமாக அவருக்கு ஏற்ற முயன்றுள்ளனர், ஆனால் பெண் போராடியுள்ளார். அப்போது அவரைக் கட்டிப்போட்டு அவர்கள் பலாத்காரம் செய்துள்ளனர். 

இச்சம்பவம் நடக்கும்போது, ‘இவருக்குத் துணையாக இருந்த இவரது சகோதரி தேநீர் வாங்க வெளியே சென்றார். அந்த சமயத்தில் நள்ளிரவில் இந்த 17 வயது பெண் பலாத்காரத்துக்கு ஆளானாள். இந்த பலாத்காரத்தில் பரிசோதனை எடுக்க வேண்டும் என்று அழைத்துச் சென்று மயக்க மருந்து கொடுத்து கெடுத்துள்ளனர் என தெரியவந்ததாக என்று போலீசார் தெரிவித்தனர். கடந்த 2 வாரங்களுக்கு முன், இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நர்ஸ் படிப்பு படிக்கும் மாணவி ஒருவரை, வார்டு பாய் மற்றும் மருத்துவ மாணவர் ஆகோயர் பலாத்காரம் செய்ததாக செய்திகள் வெளியானது. இதையடுத்து 2 பேரும் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

அட பாவிங்களா... ரூ.3 கோடி பணம்.. அரசு வேலைக்காக பாம்பை ஏவி தந்தை கொ**.. மகன்களின் சதி அம்பலமானது எப்படி?
காலி பாட்டிலுக்காக 5 ரூபாய் தகராறு.. பட்டப்பகலில் 3 குழந்தைகளின் தந்தை ஓட ஓட விரட்டி கொ**..! தூத்துக்குடியில் பயங்கரம்