பெண் அடித்து கொலை... மெரினாவில் பரபரப்பு!

Published : Nov 04, 2018, 02:57 PM IST
பெண் அடித்து கொலை... மெரினாவில் பரபரப்பு!

சுருக்கம்

மெரினா கடற்கரையில் உள்ள நீச்சல் குளம் அருகே மணல் பரப்பில் இளம்பெண் ஒருவர் உடல் முழுவது பலத்த ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்தார். இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சென்னை மெரினா கடற்கரையில் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை மெரினா கடற்கரைக்கு தினமும் லட்சக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக சனி மற்றும் ஞாயிறு, விடுமுறை நாட்களில் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வருகின்றனர். இதில், சுற்றுலா பயணிகளும் அடங்கும். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஜல்லிக்கட்டு போராட்டம் மெரினா கடற்கரையில் நடத்தப்பட்டது. அதன்பின்னர், மெரினாவில் கெடுபிடிகள் அதிகரித்துள்ளது. கூட்டமாக யாரும் செல்ல கூடாது என்றும், இரவு நேரங்களில் அங்கு தங்க கூடாது எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இன்று அதிகாலையில், மெரினா கடற்கரையில் உள்ள நீச்சல் குளம் அருகே மணல் பரப்பில் இளம்பெண் ஒருவர் உடல் முழுவது பலத்த ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்தார். இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து அண்ணா சதுக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

சடலமாக கிடந்த இளம்பெண் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எதற்காக மெரினா வந்தார். எதற்காக கொலை செய்யப்பட்டார், முன் விரோதத்தில் கொலை நடந்ததா, கொள்ளை முயற்சியில் கொலை நடந்ததா, அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவம் மெரினாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பெண் சடலம் கிடந்த இடத்தின் எதிரே பல்வேறு அரசு அலுவலகங்களும், டிஜிபி அலுவலகம் உள்ளன. மேலும், அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரது சமாதிகளும் உள்ளன. இங்கு தினமும் போலுசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்று அதிக பாதுகாப்பு உள்ள பகுதியில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம், அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

திருமணமான ஒரு மாதத்தில் கணவருக்கு வந்த அந்த சந்தேகம்.. மனவேதனையில் கதறிய 26 வயது ஐஸ்வர்யா.. இறுதியில் அதிர்ச்சி
சிறுமியிடம் சில்மிஷம் செய்துவிட்டு எஸ்கேப்.. போலீசிக்கு தண்ணீ காட்டி குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள்.. 5 மாதங்களில் தீர்ப்பு