திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற பெண்... கடத்தி சென்று... உ.பி.யில் பரபரப்பு..!

By Kevin KaarkiFirst Published May 10, 2022, 10:35 AM IST
Highlights

பாதிக்கப்பட்ட பெண், தன்னை கடத்தியவர்கள் ஒரு அரசியல் கட்சி தலைவரிடம் கொண்டு சென்று அதன் பின் டட்டியா மாவட்டத்தை சேர்ந்த வேறொரு நபருடன் தன்னை கட்டாயப்படுத்தி தங்க வைத்ததாக தெரிவித்து உள்ளார். 

பெண் ஒருவர் தனது திருமண அழைப்பிதழ்களை கொடுக்கச் சென்ற போது மூன்று பேர் கொண்ட கும்பலால் கடத்தி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

18 வயதான பெண் ஒருவர் தனது திருமண அழைப்பிதழ்களை கொடுக்கச் சென்ற போது ஜான்சி மாவட்டத்தை சேர்ந்த மூன்று நபர்களால் கடத்தி செல்லப்பட்டு, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் அளித்து இருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண், தன்னை கடத்தியவர்கள் ஒரு அரசியல் கட்சி தலைவரிடம் கொண்டு சென்று அதன் பின் டட்டியா மாவட்டத்தை சேர்ந்த வேறொரு நபருடன் தன்னை கட்டாயப்படுத்தி தங்க வைத்ததாக தெரிவித்து உள்ளார். 

ஏப்ரல் 18 ஆம் தேதி திருமண அழைப்பிதழ்களை கொடுக்கச் சென்ற போது மூன்று பேர் தன்னை கடத்தி சென்றனர் என அந்த பெண் புகாரில் தெரிவித்து இருக்கிறார். ஏப்ரல் 21 ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில், தன்னை கடத்தி சென்றவர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பெண் மேலும் தெரிவித்து இருக்கிறார்.

புகார்:

தன்னை கடத்தி சென்றவர்கள் சில நாட்கள் தன்னை வெவ்வேறு இடங்களில் தங்க வைத்து, அதன் பின் அரசியல் கட்சி தலைவரிடம் கொண்டு சென்றனர். அரசியல் கட்சி தலைவர் மேலும் சில நாட்கள் ஜான்சி எனும் இடத்தில் தங்க வைத்து இருந்தார். அதன் பின் மத்திய பிரதேச மாநிலத்தில் தனது விருப்பத்தை மீறு வேறொரு நபருடன் தங்க வைக்கப்பட்டதாக அந்த பெண் காவல் நிலைய அதிகாரிகளிடம் தெரிவித்து உள்ளார்.

டட்டியாவில் இருந்து எப்படியோ தனது தந்தைக்கு அழைப்பை மேற்கொண்டதாகவும், அவர் பத்தாரி கிராமத்தில் இருந்து காவல் துறை அதிகாரிகள் உதவியுடன் தன்னை மீட்டதாகவும் அந்த பெண் தெரிவித்து இருக்கிறார். 

விசாரணை:

“தான் கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வேறொரு நபருக்கு விற்பனை செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்து இருக்கிறார். அதன்படி பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. பெண்ணின் வாக்குமூலம் மாஜிஸ்திரேட் முன்பு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என தெஹ்ரௌலி வட்டார அலுவலர் அனுஜ் சிங் தெரிவித்து உள்ளார். 

click me!