லட்சக்கணக்கில் கள்ளநோட்டுகள் அடித்து சொகுசு வாழ்க்கை..! ஆப்பு வைத்த காவல்துறை..!

By Manikandan S R SFirst Published Mar 9, 2020, 11:56 AM IST
Highlights

ஆம்பூர் அருகே கள்ளநோட்டு அடித்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே இருக்கிறது அய்யலூர் கிராமம். இந்த 500 மற்றும் 200 ரூபாய் கள்ளநோட்டுகள் அச்சடிக்கப்பட்டு மும்பையில் புழக்கத்தில் விடுக்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து தமிழகம் வந்த மகாராஷ்டிரா காவலர்கள் தமிழக காவல்துறையினர் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.  அய்யலூர் கிராமத்தில் இருக்கும் ஒரு வீட்டில் கள்ளநோட்டுகள் அச்சடிப்பது தெரிய வந்து காவல்துறையினர் சென்றனர்.

அங்கு வேலூரைச் சேர்ந்த பாஸ்கர் மற்றும் அய்யனூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் ஆகியோர் கள்ளநோட்டுகளை அச்சடிப்பது தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் மகாராஷ்டிர இன்ஸ்பெக்டர் ராஜேஷ் பாபு ராவ் தலைமையிலான போலீசார் மற்றும் ஆம்பூர் காவல்துறையினர் சுற்றிவளைத்துப் அதிரடியாக கைது செய்தனர். வீட்டை சோதனை செய்ததில் கலர் ஜெராக்ஸ் பிரிண்டர் மூலம் கள்ளநோட்டு அடித்து புழக்கத்தில் விட்டுள்ளனர். மேலும் அங்கு 7.50 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தை அலற விடும் கொரோனா..! திமுக எடுத்த அதிரடி முடிவு..!

click me!