உதயநிதி அரசியலுக்கே வரமாட்டார்.. விஜயகாந்த் அவ்வளவு தான்... கலர் கலராய் புரூடா விடும் டுபாக்கூர் ஜோதிடர்..!

Published : Jul 16, 2019, 07:02 PM IST
உதயநிதி அரசியலுக்கே வரமாட்டார்.. விஜயகாந்த் அவ்வளவு தான்... கலர் கலராய் புரூடா விடும் டுபாக்கூர் ஜோதிடர்..!

சுருக்கம்

கலர் கலராய் புரூடா விட்டுக் கொண்டு அவர் சொன்ன விஷயங்கள் ஒன்றும் பலிக்காத நிலையில் டிரெண்டிங் ஜோதிடராய் வலம் வருகிறார் பாலாஜி ஹாசன்.   

ஓராண்டுக்கு முன் அவர், ’’உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வரமாட்டார். இன்னும் சில தினங்களில் மு.க.அழகிரியை மு.க.ஸ்டாலின் திமுகவில் இணைத்துக் கொள்வார். என்றெல்லாம் கூறி வந்த ஜோதிடர் பாலாஜி ஹாசன் கடந்த ஆண்டு 2018 ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி ’மறந்து விட்டேன். இன்று நேரம் முடிய போகிறது.

இனிய பிறந்த நாள் கருப்பு கள்ளம்., கபடம் அற்ற தங்கமே. ஏழைகளின் தலைவன்  தொன்டர்களின் நண்பன். ரசிகர்களின் அன்பு நாயகன். விஜயகாந்திற்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். நேரம் முடிய போகிறது இன்று

வாழ்த்தாதவர்கள் மறக்காமல் வாழ்த்துங்கள். அரசியல் நோக்கர்கள், எனது ஜோதிட பதிவை விரும்புவர்கள் இந்த பதிவை 3 முறை படிக்க வேண்டாம்’’ எனற் அதிர்ச்சியூட்டினார். 

அந்தப்பதிவை தொடர்ந்து இரண்டு நாட்கள் கடந்த பிறகு மற்றொரு பதிவில், ‘’சற்று முன் விஜயகாந்த் ICU பிரிவில் 
அனுமதி. அன்று அவர் பிறந்த நாளில் இது நடக்கும் என்று சொன்ன போது என்னை திட்டியவர்கள் என்ன சொல்ல போறேல். ஜோதிட துறையில் சவால் போன்ற விசயம் மரண கணிப்பு தான். எனக்கு இது போன்ற சாவல்களை செய்வே ஆர்வம் தவிர ஜோதிட புத்தக வாசகங்கள் எடுத்து அதை முகநூலில் பதிவு செய்து எழுதுவதில் இல்லை’’ என அவர் தெரித்து இருந்தார். 

ஆனால் இப்போது கடந்த ஆண்டை விட விஜயகாந்த் உடல் நிலை ஆரோக்கியமாக இருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் இப்போது திமுக இளைஞரணி செயலாளராக பதவியேற்றுக் கொண்டுள்ளார். ஆகையால் கலர் கலராய் புரூடா விட்டுக் கொண்டு அவர் சொன்ன விஷயங்கள் ஒன்றும் பலிக்காத நிலையில் டிரெண்டிங் ஜோதிடராய் வலம் வருகிறார் பாலாஜி ஹாசன். 

அதென்ன பாலாஜி ’ஹாசன்’..? கமல் ஹாசன் மீது கொண்ட அன்பால் ஹாசனை சேர்த்துக் கொண்டாராம் ஜோதிடர் பாலாஜி... இனி இதை பேருக்கு முன்னாள் புரூடா என்பதையும் சேர்த்துக் கொண்டால் பொறுத்தமாக இருக்கும் பாலாஜி..! 

PREV
click me!

Recommended Stories

அட பாவிங்களா... ரூ.3 கோடி பணம்.. அரசு வேலைக்காக பாம்பை ஏவி தந்தை கொ**.. மகன்களின் சதி அம்பலமானது எப்படி?
காலி பாட்டிலுக்காக 5 ரூபாய் தகராறு.. பட்டப்பகலில் 3 குழந்தைகளின் தந்தை ஓட ஓட விரட்டி கொ**..! தூத்துக்குடியில் பயங்கரம்