“ஒரு பள்ளி மாணவர்கள்.. சிசிடிவியில் ஸ்பிரே !” பக்கா பிளானில் சொதப்பிய கும்பல் - சினிமாவை மிஞ்சிய சம்பவம்

Published : Aug 16, 2022, 05:19 PM IST
“ஒரு பள்ளி மாணவர்கள்.. சிசிடிவியில் ஸ்பிரே !” பக்கா பிளானில் சொதப்பிய கும்பல் - சினிமாவை மிஞ்சிய சம்பவம்

சுருக்கம்

10 நாட்களாக திட்டமிட்டு, கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியதும் தெரிய வந்தது.

சென்னை அரும்பாக்கம், ரசாக் கார்டன் சாலையில், பெடரல் வங்கியின் நகைக்கடன் பிரிவான பெட் வங்கி நிதிச் சேவைகள் மையம் இயங்கி வருகிறது. இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த 31.7 கிலோ தங்க நகைகள் கடந்த 13-ம் தேதி கொள்ளை போனது. பட்டபகலில் நடந்த  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வங்கியின் கிளை மேலாளர் சுரேஷ் அளித்த புகாரின் பேரில், அரும்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்ட னர். இதில், கொள்ளையில் ஈடுபட்டது அதே வங்கியில் மண்டல மேலாளராகப் பணிபுரிந்த முருகன் என்பவர் மூளையாகச் செயல்பட்டதும், 10 நாட்களாக திட்டமிட்டு, கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியதும் தெரிய வந்தது.

மேலும் செய்திகளுக்கு..“திருந்திய ஓபிஎஸ், திருந்தாத இபிஎஸ்.. எல்லாமே எடப்பாடியின் பதவிவெறி !” ஓங்கி அடித்த டிடிவி தினகரன்

கொள்ளை நடந்த 24 மணி நேரத்துக்குள், சென்னை வில்லிவாக்கம் பாரதி நகரைச் சேர்ந்த சந்தோஷ், அதே பகுதி மண்ணடி தெருவைச் சேர்ந்த பாலாஜி ஆகியோர் முதலில் சிக்கினர். அவர்களிடம் இருந்து 18 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.8.5 கோடி ஆகும்.இந்த கொள்ளை சம்பவத்துக்கு உதவியாக இருந்த செந்தில் குமரன் என்பவரையும் போலீஸார் பிடித்தனர். இவர்களிடம் இருந்து 2 கார்கள், ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட நகைகள் நேற்று அரும்பாக்கம் காவல் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டன. அங்குள்ள அறையில், 18 கிலோ தங்க நகைகளும் காட்சிப்படுத்தப்பட்டன. சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், வடசென்னை காவல்கூடுதல் ஆணையர் அன்பு, இணை ஆணையர் ராஜேஸ்வரி, துணை ஆணையர் விஜயகுமார் ஆகியோர் நேற்று காவல் நிலையம் வந்து நகைகளைப் பார்வையிட்டனர்.

இந்த நிலையில் கோவையில் மற்றொரு குற்றவாளியான சூர்யா பதங்கியிருந்ததாக தகவல் கிடைத்தது. இதன்காரணமாக தனிப்படை காவல்துறையினர் கோவைக்கு விரைந்தனர். அங்கு அவர்கள் சூர்யாவை மடக்கி பிடித்தனர். அரும்பாக்கம் வங்கி கொள்ளை சம்பவம் தொடர்பாக தற்போது வரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி மார்பு & விலா எலும்பில் காயம்.. சிசிடிவி காட்சி எங்கே? விசிகவுக்கு தொடர்பு?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!