விசாரணைக்கு அழைத்த போலீஸிடம் வழக்கம்போல் ‘நான் என்னாங்க சார் பண்றது? அழகா பொறந்தது….’ என அதே பழைய பல்லவியை துவக்கியிருக்கிறார். கடுப்பான லேடி போலீஸ் சுடச்சுட நாளு மாத்து மாத்திவிட்டாராம்.
இந்த டயலாக் உங்களுக்கு நிச்சயம் வாசகம் இருக்கும் வாசகர்களே…. ‘அரசியல்னு வந்துட்டா அதலபாதாளாம் வரை இறங்கி அடிப்பதுதான் இந்திய அரசியல்வாதிகளின் அடையாளமே. ஆனால் அதற்காக இந்தளவுக்கு மோசமாக இறங்க கூடாது, அதுவும் எம்.எல்.ஏ., எம்.பி. சீட்டுக்காகன்னாலும் அதில் ஒரு அர்த்தமிருக்குது. போயும் போயும் ஒரு நகராட்சி கவுன்சிலர் சீட்டுக்காகவா இப்படியெல்லாம் கேவலமா ஸ்கெட்ச் போடுவீங்க?’ – என்று கன்னாபின்னாவென விமர்சிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.” - என்பதே அது.
அதாவது சேலம் சூரமங்கலத்தை சேர்ந்த தி.மு.க. புள்ளி ஒருவர், அந்த ஏரியாவின் கலையான இளம் பெண் ஒருவரை பயன்படுத்தி தொழிலதிபர்கள், அரசியல் செல்வந்தர்களை வீழ்த்தி, பலான படமெடுத்து, அதை வைத்து மிரட்டி காசு பார்த்ததையும்! ஒரு கட்டத்தில் அதே ட்ரிக்கை பயன்படுத்தி, தேர்தலில் தனக்கு சீட் கிடைப்பதில் இடைஞ்சல் செய்த சொந்த கட்சியின் நிர்வாகி ஒருவரையே வீழ்த்தினார். என்னதான் கில்மா வீடியோவில் சிக்கினாலும் கூட, இந்த மோசடியை தைரியமாக போலீஸிடம் சொன்னார் அந்த நபர்.
விளைவு, அந்த நபரையும், லேடியையும் அமுக்கி விசாரணை செய்த போலீஸ், மாவட்ட நிர்வாகிகளின் பிரஷரால் வழக்கு பதிவு பண்ணாமல், திட்டி மட்டும் அனுப்பியதை சில நாட்களுக்கு முன் ஒரு கட்டுரையாக வெளியிட்டிருந்தோம். விசாரணை சமயத்தில் போலீஸிடம் ”நான் என்னங்க பண்ணட்டும்? அழகா பொறந்தது என்னோட தப்புங்களா? அம்சமா இருக்குறது என்னோட குத்தமா? என்னை மிரட்டி மிரட்டியே ’காரியம்’ சாதிச்சுக்கிறாங்க. என்னை கேட்டுட்டா இதையெல்லாம் எடுக்கிறாங்க? அவங்களே எல்லாத்தையும் எடுத்துக்கிறாங்க.” என்று கண்ணீர் வடித்து, காக்கிச் சட்டைகளையே கலங்க வைத்துவிட்டு வீடு திரும்பினார்.
ஆனால் அடுத்த இரண்டு நாட்களில் அப்பெண்மணியின் புதிய வீடியோக்கள் சேலம் ஆளுங்கட்சியினுள் பட்டாஸு கெளப்புகின்றனவாம். பழைய வைஸ் சேர்மனோடு நிர்வாணமாய் வீடியோ காலில் பேசுவது, ரியல் எஸ்டேட் பிரமுகரை தன் வீட்டுக்கே வரவழைத்து பெட்டினில் தள்ளுவது என்று அந்த லேடியின் தாறுமாறு கில்மா ஸீன்கள் பல்லைக் காட்டுகின்றதாம்.
ஆக மீண்டும் அவரை விசாரணைக்கு அழைத்த போலீஸிடம் வழக்கம்போல் ‘நான் என்னாங்க சார் பண்றது? அழகா பொறந்தது….’ என அதே பழைய பல்லவியை துவக்கியிருக்கிறார். கடுப்பான லேடி போலீஸ் சுடச்சுட நாளு மாத்து மாத்திவிட்டாராம். அதன்பிறகு, தன்னை யாரும் மிரட்டியெல்லாம் அப்படி பண்ண சொல்லவில்லை, பணத்துக்காக தானும் தன் கள்ள லவரும் இணைந்து திட்டம்போட்டு இப்படி பண்ணினோம்! என ஒத்துக் கொண்டாராம் கலையான அந்த பெண்மணி. ஆனாலும் பாருங்க… அழகா பொறந்தது அவங்க குத்தமா? நீங்களே சொல்லுங்க.