முஸ்லிம் என்று எண்ணி இந்து மாற்றுத் திறனாளி முதியவர் படுகொலை.? பாஜகவின் வெறுப்பு அரசியல்..! ஜவஹிருல்லா கண்டனம்

By Ajmal KhanFirst Published May 22, 2022, 2:30 PM IST
Highlights

 பா.ஜ.க. பிரமுகர் ஒருவர்  வயதான முதியவரை “உனது பெயர் முகமதா?” என்று கேட்டப்படி தொடர்ச்சியாக அடித்ததில் அந்த முதியவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பா.ஜ.க. பிரமுகர் தினேஷ் குஷ்வாஹா போலீசார் கைது செய்துள்ளனர்.
 

முதியவரை தாக்கும் காட்சி வைரல்

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர், வயதான முதியவர் ஒருவரை தாக்கும் வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவியது. சமூக வலைதளத்தில் வைரல் ஆன அந்த வீடியோவில் பாஜக பிரமுகரான தினேஷ் குஷ்வாஹா, முதியவரிடம், “உனது பெயர் முகமதா?” என்று கேட்டப்படி தொடர்ச்சியாக அடித்துக் கொண்டே இருந்தார். இதனால் தடுமாறிய முதியவர் பதில் அளிக்க திணறினார். எனினும், தினேஷ் குஷ்வாஹா தொடர்ந்து முதியவரை கண்ணத்தில் அரைந்து கொண்டே  இருந்தார். மேலும் “உனது பெயரை சரியாக சொல், உன்னுடைய ஆதார் அட்டையை கொடு” என கேட்டுக் கொண்டு இருந்தார்.  இந்த சம்பவம் சமூக வலை தளத்தில் பரவியது. இதனையடுத்து நடைபெற்ற விசாரணையில்,  உயிரிழந்த முதியவர் பன்வர்லால் ஜெயின். இவர் ராட்லம் மாவட்டத்தின் சார்சி பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. 

நீ முகமது தானே?

இந்த வீடியோ காட்சி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பா.ஜ.க. பிரமுகர் தினேஷ் குஷ்வாஹா போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும்  மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம் எச் ஜவாஹிருல்லா,மத்தியப் பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தில் பொதுமக்கள் கூடும் இடத்தில் மாற்றுத்திறனாளி  பன்வாரிலால் ஜெயின் என்பவரை " நீ முகமது தானே. உன் ஆதார் அட்டையைக்காட்டு"என்று சொல்லி பாஜகவை சேர்ந்த தினேஷ் குஷ்வாஹா என்பவர்,  சரமாரியாகத்தாக்கி படுகொலைச் செய்யப்பட்ட பயங்கரவாதச் செயலை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ளார். மக்களிடையே வெறுப்புணர்வைத் தூண்டி, நாட்டை இவ்வளவு மோசமான நிலைக்கு பாஜக கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் என நினைந்து இந்து படுகொலை?

முஸ்லிம் என்று நினைத்து இந்து முதியவரைத் தாக்கிக்கொன்று அழிக்கும் மிருகத்தனமான மனநிலையைத் தனது கட்சித் தொண்டர்களிடம் வீரியமாக வளர்த்தெடுத்து தற்போது இந்துக்களையே கொன்று ஒழித்து அறுவடை செய்துகொண்டிருக்கிறது பாஜக என கூறியுள்ளார்.  வட இந்திய ஊடகங்கள் முஸ்லிம் என்று நினைத்து இந்துவை தவறுதலாகக் கொன்றுவிட்டதாகத் தலைப்பிட்டு  பரிதாபப் படுகின்றன. கொல்லப்பட்டது ஒரு மனிதனின் உயிர் என்கிற நிலையைக் கடந்து மத ரீதியாகப்பார்க்கும் வெறுப்பு அரசியல் அடிமட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரை பாஜக மற்றும் சங் அமைப்புகளிடையே ஊறிப்போய் கிடப்பதையே இது காட்டுவதாகவும் கூறியுள்ளார். இந்தியத் திருநாட்டில் சிறுபான்மையின மக்களுக்கு எதிராகத் தொடர்ந்து நடத்தப்படும் மனித உரிமை மீறல்களுக்கு ஒரு சிறிய சான்று இந்த சம்பவம் என தெரிவித்துள்ளார். மேலும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் பன்வாரிலால் ஜெயின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்தஇரங்கலையும் பாஜகவினரின் வெறுப்பு அரசியலுக்கு கடும் கண்டனத்தையும்தெரிவித்துக் கொள்வதாக அந்த அறிக்கையில் ஜவஹிருல்லா கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்

நீ முஸ்லிமா ? என கேட்டு நடுரோட்டில் தாக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு... பா.ஜ.க. பிரமுகர் கைது..!

click me!