
தடை செய்யப்பட்ட மருந்து பாட்டில்களை மும்பை போதை பொருள் தடுப்புப் பிரிவு பறிமுதல் செய்து உள்ளது. மேலும் இது தொடர்பாக இரண்டு பேரை போதை பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட மருந்து பாட்டில்கள் கடத்தப்படுவதாக போதை பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து ஆக்ரா - மும்பை நெடுஞ்சாலையில் தானே மாவட்டத்தின் பிவாண்டி பகுதியில் கார் ஒன்றை போதை பொருள் தடுப்பு பிரிவினர் தடுத்து நிறுத்தினர்.
பின் நிறுத்தப்பட்ட காரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 8 ஆயிரத்து 640 இருமல் மருந்து சிரப் பாட்டில்கள் இருந்தன. இவை அனைத்தும் கோடீன் சார்ந்து உருவாக்கப்பட்டவை ஆகும். இவற்றின் மொத்த எடை 864 கிலோ ஆகும். இவை வாகனம் முழுக்க 60 பெட்டிகளில் வைக்கப்பட்டு இருந்தன. காரை ஓட்டி வந்த ஒட்டுனர் கொடுத்த தகவல்களை அடுத்து போதை பொருள் தடுப்பு பிரினர்
அவரை கைது செய்தனர்.
கைது:
இதோடு கைதான நபரை வைத்து மற்றொருவரையும் போதை பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். இந்த விவகாரத்தின் போது மேலும் இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இந்த பாட்டில்கள் போதை ஏற்றிக் கொள்ள விரும்புவோருக்கு வழங்க எடுத்து செல்லப்பட்டது. இவை மும்பை மற்றும் தானே பகுதிகளில் மருத்துவர் குறிப்பு இன்றி வழங்க கொண்டு செல்லப்பட்டது.
வழக்குப் பதிவு:
தடை செய்யப்பட்ட மருந்து பாட்டில்களை காரில் கடத்தி சென்ற விவகாரத்தில் காரோடு, தடை செய்யப்பட்ட மருந்து பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய இரண்டு பேர் கைது செய்யப்பட்டு, அவர்களின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.