அமமுக பிரமுகர் ஓட ஓட விரட்டி படுகொலை.. கணவரின் உடலை பார்த்து கதறிய கர்ப்பிணி மனைவி.. DMK பிரமுகருக்கு தொடர்பு?

Published : Feb 16, 2021, 02:14 PM ISTUpdated : Feb 16, 2021, 02:15 PM IST
அமமுக பிரமுகர் ஓட ஓட விரட்டி படுகொலை.. கணவரின் உடலை பார்த்து கதறிய கர்ப்பிணி மனைவி.. DMK பிரமுகருக்கு தொடர்பு?

சுருக்கம்

திருப்பத்தூரில் அமமுக மாணவரணி செயலாளர் மர்ம நபர்களால் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூரில் அமமுக மாணவரணி செயலாளர் மர்ம நபர்களால் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் கவுதம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வானவராயன்(30). இவர் திருப்பத்தூர் மாவட்ட அமமுக மாணவரணி செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். இவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இவரது மனைவி இந்து (25) நிறைமாத கர்ப்பிணி. வானவராயன் கட்சிப்பணியுடன் தனியாக பைனான்ஸ் நடத்தி வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழிலும் செய்து வந்தார். 

இந்நிலையில், வானவராயன் தனது வீட்டில் இருந்து பைனான்ஸ் வசூலுக்கு இருசக்கர வாகனத்தில் மாலை புறப்பட்டார். பின்னர், வசூல் முடித்துக் கொண்டு பூங்காவனத்தம்மன் கோயில் வழியாக தனது வீடு நோக்கி வந்துக்கொண்டிருந்தார். அப்போது, இங்கு மறைந்து கொண்டிருந்த 6 பேர் கொண்ட கும்பல் வானவராயனை பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தனர். இதனையடுத்து, அவர்களிடம் இருந்து தப்பியோட முயன்றார். ஆனார், மர்ம கும்பல் அவரை விடாமல் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். 

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வானவராயன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் வானவராயனுக்கும் கவுதம் பேட்டையை சேர்ந்த திமுக பிரமுகர் ஒருவருக்கும் தொழில் ரீதியாக முன்விரோதம் இருந்தது. இருவரும் அடிக்கடி மோதிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அந்த கொலை நடைபெற்றிக்கலாம் என்று கூறப்படுகிறது. 

PREV
click me!

Recommended Stories

தனியாக செல்லும் பொண்ணுங்க தான் டார்கெட்.. தொடக்கூடாத இடத்தில் தொட்டு சிக்கிய 27 வயது இளைஞர்.. விசாரணையில் அதிர்ச்சி
சார் நீங்களும் டீச்சரும்.. செல்போனில் பலான வேலை பார்த்த போட்டோ என்கிட்ட இருக்கு! ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய மாணவர்கள்