திருச்செந்தூரில் குழந்தை கடத்தல்.. கைதான பெண் திடீர் உயிரிழப்பு.. காவல் நிலையத்தில் நடந்தது என்ன?

By vinoth kumar  |  First Published Oct 10, 2023, 7:48 AM IST

திடீரென குற்றவாளியான திலகவதி மயங்கியுள்ளார். பின்னர், போலீசார் அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பரிசோதித்த போது திலகவதி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 


திருச்செந்தூரில் குழந்தை கடத்தலில் ஈடுபட்ட பெண் திலகவதி காவல்துறை விசாரணைக்காக சேலம் அழைத்து செல்லும் வழியில் திடீரென உயிரிழந்தார். 

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் முத்துராஜ். கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரதி (32). இந்த தம்பதிக்கு  ராஜேஸ்வரி, ராஜசேகர், ஸ்ரீஹரிஸ் மூன்று பிள்ளைகள் உள்ளனர். முத்துராஜ்க்கு உடல்நலம் சரியில்லாததால் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருப்பதற்காக கடந்த மாதம் 28ம் தேதி குலசேகரப்பட்டினம் கோவிலுக்கு தனது கடைசி குழந்தை ஸ்ரீஹரிசுடன் வந்து கோவில் வளாகத்தில் தங்கியுள்ளனர்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- இப்படியொரு புருஷனா? கள்ளக்காதலனுடன் மனைவி ஓட்டம்! நண்பர்களுக்கு பிரியாணி மது விருந்து கொடுத்து கொண்டாடிய கணவர்

இந்நிலையில் தனது கணவருக்கு மனநிலை சரியில்லை, அதனால் கோவிலில் மாலை அணிந்து விரதம் இருப்பதாகக் கூறி 40 வயது பெண் திலகவதி கோவில் வளாகத்தில் அறிமுகமாகியுள்ளார். இதனைதொடர்ந்து திலகவதியுடன் ரதி திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றுள்ளனர். அப்போது ரதியிடமிருந்து குழந்தையை பெற்றுக் கொண்ட திலகதி திடீரென குழந்தையுடன் மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதனையடுத்து சிசிடிவி காட்சிகளில் ஆண் நபருடன் திலகவதி குழந்தையை கடத்தி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியதில் திலகவதி கோவை மாவட்டம் ஆலாந்துறை அடுத்துள்ள முட்டத்துவயல் பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து திருச்செந்தூர் போலீசார் ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன்(43), திலகவதி(35) தம்பதியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

இதையும் படிங்க;-  எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அம்மாவுடன் கள்ளத்தொடர்பு.. கைவிட மறுத்த ஓனர்! ஊழியர் செய்த காரியம்.!

விசாரணையில், அவர்கள் குழந்தையை திருடியதாக ஒப்புகொண்ட நிலையில் குழந்தையை சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருப்பதாக கூறி உள்ளனர். பின்னர் ஆலந்துறை போலீசார் சேலம் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்து குழந்தை இருக்கும் இடம் குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். இதனிடையே திடீரென குற்றவாளியான திலகவதி மயங்கியுள்ளார். பின்னர், போலீசார் அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் திலகவதி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இவர் சேலத்திற்கு  விசாரணைக்காக போலீசார் அழைத்து செல்லும்போது உயிரிழந்தாரா? அல்லது காவல் நிலையத்தில் விசாரணையின் போது உயிரிழந்தாரா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

click me!