அபிராமி ‘பிரியாணி’சுந்தரம் ஸ்டைலில் இன்னொரு டிக்டாக் ஜோடி...குழந்தையை அடித்துக்கொடுமைப்படுத்துவதாக தந்தை புகார்...

By Muthurama LingamFirst Published Jul 10, 2019, 12:17 PM IST
Highlights

டிக்டாக், ஸ்முல் போன்ற சமூகவலைதள செயலிகள் மீதான மோகத்தால்  தனது மனைவியும், அவரோடு முறையற்று சேர்ந்து வாழும் நபரும் சேர்ந்து,  எனது மகனை அடித்து துன்புறுத்துகிறார்கள் என நெல்லை சரணாலயத்தில் செயல்படும் குழந்தைகள்நலகுழுவில் முறையிட்டுள்ளார் பாதிக்கப்பட்ட ஒரு தந்தை.

டிக்டாக், ஸ்முல் போன்ற சமூகவலைதள செயலிகள் மீதான மோகத்தால்  தனது மனைவியும், அவரோடு முறையற்று சேர்ந்து வாழும் நபரும் சேர்ந்து,  எனது மகனை அடித்து துன்புறுத்துகிறார்கள் என நெல்லை சரணாலயத்தில் செயல்படும் குழந்தைகள்நலகுழுவில் முறையிட்டுள்ளார் பாதிக்கப்பட்ட ஒரு தந்தை.

திருச்சியில் வசிக்கும் மகேஷ் என்பவருக்கும் நெல்லையை சேர்ந்த திவ்யா என்பவருக்கும் கடந்த 2008 ஆம் ஆண்டு  பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் நடைபெற்றது. கலப்பு திருமணம் என்பதால் பெண் வீட்டாருக்கு  சம்மதம் இல்லை.  இதனால் திருச்சியில் இருவரும் தனியாக  வசித்து வந்துள்ளனர்.  கடந்த 2013 ம் ஆண்டு இந்த தம்பதியருக்கு ஆண்  குழந்தை பிறந்துள்ளது. இதன்பின் 2017 ல் கணவர் மகேஷுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து திவ்யா தனது மகனுடன் திருநெல்வேலியில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார். தொடர்ந்து திவ்யா விவாகரத்து கேட்டு நெல்லை நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்து உள்ளார். ஆனால் அந்த வழக்கானது தள்ளுபடி ஆகி உள்ளது. 

அதே நேரம் மகேஷ், மனைவி தன்னோடு சேர்ந்து வாழ வேண்டும், குழந்தை அப்பாவிடம் இருக்க வேண்டும் என திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். அந்த வழக்கில் 2018 ம் ஆண்டு மகேஷிற்கு ஆதரவாக , சேர்ந்து வாழ வேண்டும் என நீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது. இந்த தீர்ப்பின்படி 2019 ஜனவரியில் தனது மகனை வந்து பார்த்து சென்றுள்ளார் தந்தை மகேஷ். 

இந்நிலையில் நேற்று 09.07.19 செவ்வாய்கிழமை நெல்லை சந்திப்பில் அரசின் பார்வையில் சரணாலயத்தில் "குழந்தைகள்நலகுழு" வில் புகார் கொடுத்துள்ளார், அதில் தனது மனைவியான திவ்யா தற்போது தன்னை விட்டு பிரிந்து வாழ்கிறார், எங்கள் மகன் என் மனைவி திவ்யா வளர்ப்பில் 1 ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த வாரம் எனக்கு எனது மாமியார் மற்றும் மைத்துனரிடம் இருந்து தகவல் வந்தது, அதாவது என் மனைவி திவ்யா வேறு ஒரு நபருடன் தகாத உறவில் உள்ளார் என்றும் அவரோடு உறவில் இருக்கும் அன்சாரி என்பவன் என் மகனை அடித்து துன்புறுத்தியதாகவும் இந்த தகவல்கள் அனைத்தும் எங்கள் மகன் படிக்கும் பள்ளி தலைமையாசிரியர் மூலமாகவும், மகனின் உடலில் இருந்த காயங்கள் மற்றும் அன்சாரி தன்னை அடித்து துன்புறுத்துவதாக  வாக்குமூலமும் கொடுத்ததாக தெரிவித்தார்கள். 

மகன் நிலை மோசமாக உள்ளது தெரிந்ததால் உடனடியாக என் மகனை மீட்டு மனைவியிடம் இருந்து பாதுகாத்து என்னுடன் அழைத்து செல்வதற்கும், என் மகனை அடித்து கொடுமைப்படுத்திய என் மனைவியின் தகாத உறவில் இருக்கும் அன்சாரி மீது நடவடிக்கை எடுக்க கோரியும் குழந்தைகள் நலகுழுவில் இன்று புகார் தெரிவித்தேன். ஆனால் அதன் சேர்மன் ஒருதலைபட்சமாக விசாரித்து காயமுற்ற மற்றும் அவன் கொடுத்த வாக்குமூலத்தையும் கேட்டும் அதனை கண்டுகொள்ளாமல் என் மகனை என் மனைவியுடனே அனுப்பி வைத்துவிட்டார், என்னை பிரிந்து என் மனைவி அவரது அம்மா வீட்டிலும் தற்போது இல்லை, தனியாக வேறொரு இடத்தில் வசிக்கிறார், முறையாக நாங்கள் பிரியாத நிலையில் வேறு ஒரு நபருடன் தகாத உறவு கொண்டு வாழ்க்கை நடத்துகிறார், 

தற்போதைய அவளது நடவடிக்கைகள் பிடிக்காமல் என் மாமியாரும், மைத்துனரும் வேதனையோடு இருக்கின்றனர், எனவே என் மகனை, எனது மனைவி திவ்யா மற்றும் அவளோடு சேர்ந்து வாழும் அன்சாரியிடமிருந்து காப்பாற்றி தருவார்கள் என நம்பி முறையிட்டேன் ஆனால் அது நடக்கவில்லை எனவே இதில் சரியான நடவடிக்கை எடுத்து என் குழந்தை மீட்டு தர ஆட்சியரிடம் கோரிக்கை வைக்க உள்ளேன் என தெரிவித்தார், 

தன் மனைவி  தன்னை விட்டு பிரியவும், தங்கள் மணவாழ்க்கையில் விரிசல் ஏற்பட முக்கிய காரணங்கள் Smule, Facebook  மற்றும் டிக்டாக் போன்றவைதான் என்றவர் அதற்கான ஆதாரங்களையும் நம்மிடம் காட்டினார். 

சமூகவலைதள செயலிகள் சமீபகாலமாக கொலை, தற்கொலைகளுக்கு காரணமாகி வரும் நிலையில் தற்போது ஒரு குடும்பம் பிரிவதற்கும், மகனை துன்புறுத்தவும்  தூண்டியுள்ளது வேதனையானது என்கின்றனர் உடன் வந்தவர்கள்.

click me!