கொடநாடு கொலை வழக்கு ! திபு, பிஜினுக்கு ஜாமீன் வழங்கியது உதகை நீதிமன்றம்!!

By Selvanayagam PFirst Published Jul 9, 2019, 11:51 PM IST
Highlights

கொடநாடு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும்  திபு மற்றும் பிஜினுக்கு  உதகை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் மற்றும் பங்களாவுக்குள் கடந்த 2017 ஏப்ரல் 24ம் தேதி நுழைந்த கும்பல் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை கொலை செய்துவிட்டு உள்ளே சென்றது. 

பங்களாவில் இருந்த சில ஆவணங்களை கொள்ளை அடித்து சென்றது. இவ்வழக்கில், சயான் மற்றும் வாளையார் மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 

இந்நிலையில் கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட திபு, பிஜின் குட்டிக்கு உதகை நடுவர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. 6-வது குற்றவாளி திபு, 9-வது குற்றவாளி பிஜின் குட்டிக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி வடமலை உத்தரவிட்டார்.

நீலகிரி மாவட்டம், கொடநாட்டில் உள்ள கொடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த கொலை, கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையதாக சயன், மனோஜ் சாமி, தீபு, ஜித்தின் ஜாய், ஜம்ஷேர் அலி, சந்தோஷ்சாமி, உதயகுமார், வாளையாறு மனோஜ், பிஜின் குட்டி, சதீசன் ஆகிய 10 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். 

click me!