யார்யாரை தூக்கில் போடனும் தெளிவா சொல்லுங்க...!! சிறை நிர்வாகம் அனுப்பிய அதிரடி லெட்டர்...!!

By Ezhilarasan BabuFirst Published Jan 18, 2020, 11:43 AM IST
Highlights

 22ஆம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம் எனவே இந்த நால்வரையும் ஒரே நேரத்தில் தூக்கிலிடுவதற்கான ஆயத்தப் பணிகளை  திகார் சிறை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளை தூக்கிலிடும்  ஆணையை விரைந்து வழங்க கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் திகார் சிறை நிர்வாகம்  மனுதாக்கல் செய்துள்ளது .  கடந்த 2016ஆம்  டிசம்பர் 16 அன்று  நள்ளிரவில் ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற துணை மருத்துவ மாணவியை ,  6 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்து பேருந்தில் இருந்து சாலையில் தூக்கி எறிந்தனர்  அதில் படுகாயம் அடைந்த நிர்பயா சிங்கப்பூர் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்று அதில் பலனின்றி உயிரிழந்தார் .  இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரையும் போலீசார் திஹார் சிறையில் அடைத்தனர்.  

இதில் ராம்சிங் என்பவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த  நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் . இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொருவர் சிறார் ,  பிரிவின் கீழ் வந்ததால் அவர் தொடர்பான வழக்கு சிறார் நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு அவருக்கும் தண்டனை விதிக்கப்பட்டு கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டு அங்கு மூன்றாண்டு வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார் .  இந்நிலையில் இந்த வழக்கில் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட நால்வருக்கு ஜனவரி 22ஆம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது .  குற்றவாளிகள் முகேஷ் (32) பவன் குப்தா (25) வினை சர்மா (26) அக்ஷய் குமார் சிங் (31) ஆகிய நால்வருக்கும் திகார் சிறையில் ஜனவரி 22ஆம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம் எனவே இந்த நால்வரையும் ஒரே நேரத்தில் தூக்கிலிடுவதற்கான ஆயத்தப் பணிகளை  திகார் சிறை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தண்டனை தொடர்புகொண்டு மறுசீராய்வு மனுவை நீதிமன்றம் கடந்த செவ்வாயன்று தள்ளுபடி செய்தது, எனவே குற்றவாளிகளுக்கான கடைசி மற்றும் இறுதி சட்ட நிவாரணம் முடிவுக்கு  வந்துவிட்டது .  இந்நிலையில் நிர்பயா வழக்கில் குற்றவாளிகளை தூக்கிலிட  திகார் சிறை நிர்வாகம் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு செய்துள்ளது . அதில் , குற்றவாளி முகேஷின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டாரா.?  எனவும் விளக்கம்  கேட்டுள்ளதுடன்,   குற்றவாளிகளை தூக்கிலிடும் ஆணைய  விரைந்து அனுப்புமாறும் கேட்டுக்கொண்டுள்ளது . 

click me!