கடைசி இரவாக முடிந்த முதலிரவு.. ஆடைகள் கலைந்த நிலையில் பெண் கடப்பாரையால் குத்திக்கொலை.. மணமகனும் தற்கொலை..!

By vinoth kumarFirst Published Jun 12, 2020, 4:38 PM IST
Highlights

திருவள்ளூர் அருகே திருமணம் முடிந்து முதலிரவுக்கு சென்ற புதுப்பெண்ணை கணவன் கடப்பாரையால் அடித்து கொலை செய்துவிட்டு மணமகனும், மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் அருகே திருமணம் முடிந்து முதலிரவுக்கு சென்ற புதுப்பெண்ணை கணவன் கடப்பாரையால் அடித்து கொலை செய்துவிட்டு மணமகனும், மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள சோமஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் நீதிவாசன் (27). இவருக்கும், எண்ணூர் சடையங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ரத்தினம் என்பவருடைய மகள் சந்தியாவிற்கும் நேற்று முன்தினம் காலை வாயலூர் கொக்குமேடு கிராமத்தில் உள்ள கோவிலில் திருமணம் நடைபெற்றது. பின்னர், இருவருக்கும் முதலிரவுக்கான ஏற்பாடுகளை உறவினர்கள் செய்தனர். மணமகன் நீதிவாசனும் மணமகள் சந்தியாவும் மகிழ்ச்சியாக அறைக்குள் சென்றனர்.  

இதனையடுத்து, முதலிரவு அறைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மணப்பெண் சந்தியா இரவு 11மணியளவில் பயங்கரமாக சத்தமிட்டுள்ளார். வெளியில் படுத்திருந்த பெரியவர்கள் எழுந்து சென்று விசாரித்த போது ஒன்றும் இல்லை என்று சமாதானப்படுத்தி மணமகன் அனுப்பி வைத்துள்ளான். இந்நிலையில், அதிகாலை 3 மணியளவில் வேட்டி மட்டும் அணிந்திருந்த நீதிவாசன் உரக்க கத்தியவாறே முதலிரவு அறையில் இருந்து தப்பி யோடியுள்ளான்.

இதனால் பதறியடித்து எழுந்த உறவினர்கள் முதலிரவு அறைக்குள் சென்று பார்த்த போது மணமகள் சந்தியா ஆடைகள் கலைந்த நிலையில் கடப்பாரையால் அடித்தும் குத்தியும் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதை கண்டு உறவினர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர், முதலிரவு அறையில் இருந்து தப்பியோடிய மணமகன் நீதிவாசனை தேடி வந்த நிலையில் காலை 7 மணியளவில் அருகிலுள்ள வயல்வெளியில் உள்ள வேப்பமரம் ஒன்றில் நீதிவாசன் ஆடைகள் இல்லாத நிலையில் வேட்டியால் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனையடுத்து, அவனது சடலத்தை மீட்ட போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணையை தொடங்கினர். அதில், கடந்த சில ஆண்டுகளாகவே மணமகன் மனநலம் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். பெண்களை பார்த்தால் ஆடைகளை களைத்து விட்டு வீதியில் சுற்றும் பழக்கமும் நீதிவாசனுக்கு உள்ளதாக கூறுகிறார்கள். ஒரு திருமணம் செய்து வைத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று உறவினர்கள் சிலரின் பேச்சை கேட்டு உறவுக்கார பெண்ணான சந்தியாவை ஒரு வருடத்திற்கு முன்பு பேசி முடித்துள்ளனர். 

ஆனால், இதற்கு இடையே மனநிலை கோளாறுக்கு மருத்துவர்கள் ஆலோசனைப்படி மருந்துகள் எடுத்து வந்த நீதிவாசன் கொரோன ஊரடங்கால் கடந்த 3 மாதங்களாக அந்த மருத்துகளை எடுத்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், தான் திருமணம் முடிந்து முதலிரவு அயைில் லைத்து தனது மனைவியை கொடூரமாக கொலை செய்துவிட்டு நீதிவாசனும் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

click me!