12 ஆம் தேதி திருநாவுக்கரசு..! தாயார் கொடுத்த புது விளக்கத்தால் காவலர்களே ஷாக்..!

Published : Mar 15, 2019, 05:24 PM IST
12 ஆம் தேதி திருநாவுக்கரசு..!  தாயார் கொடுத்த புது விளக்கத்தால் காவலர்களே ஷாக்..!

சுருக்கம்

தொழில் போட்டியின் காரணமாக தன் மகன் திருநாவுக்கரசு மீது பொய் வழக்கு போடப்பட்டு உள்ளது என அவரது தாயார் புது விளக்கம் கொடுத்து உள்ளார். 

தொழில் போட்டியின் காரணமாக தன் மகன் திருநாவுக்கரசு மீது பொய் வழக்கு போடப்பட்டு உள்ளது என அவரது தாயார் புது விளக்கம் கொடுத்து உள்ளார். 

தாயார் லதா கூறியது, 

திருநாவுக்கரசு மீது கொடுக்கப்பட்ட புகாரில் உள்ள தேதியன்று, தன்  மகன் வேறு ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருந்தார். தொழில் போட்டியின் காரணமாக தான் என் மகன் மீது வீண்பழி சுமத்தி உள்ளனர். குறிப்பிட்ட அந்த தேதியில் என் மகன் வேறு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருந்ததற்கான ஆதாரம் உண்டு.நீங்கள் வேண்டும் என்றால் விசாரித்து பாருங்கள்.

பண்ணை வீடு... பண்ணை வீடு என்று கூறுகிறார்கள். அது பண்ணை வீடு எல்லாம் இல்லை. வாரம் தோறும், என் கணவர் அங்கு சென்று விளக்கு ஏற்றிவிட்டு வருவார். அடிக்கடி நாங்கள் அந்த வீட்டிற்கு சென்று வருவோம். நானும் என் மகனும் அந்த வீட்டிற்கு சென்று சுத்தம் செய்துவிட்டு, பின்னர் கோவிலுக்கு சென்று வருவோம் என அழுதபடி தெரிவிக்கிறார் தாயார் லதா

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தெரியாமலேயே வீடியோ எடுக்கும் திறமை வாய்ந்த திருநாவுக்கரசு பெற்றவர்களுக்கு தெரிந்தா இப்படி செய்திருப்பான் என சமுகவலைத்தளத்தில் மக்கள் தங்கள் கருத்தினை பகிர்ந்து வருகின்றனர்

PREV
click me!

Recommended Stories

பல்கலைக்கழகத்தில் சரமாரி துப்பாக்கிச்சூடு.. 2 மாணவர்கள் பலி.. 8 பேர் படுகாயம்.. பரபரப்பு!
திருமணமான 3 மாதத்தில் நிகிலா.. தடுக்க வந்த அண்ணன்.. இருவரின் கதையை முடித்ததும் வேறு வழியில்லாமல் தந்தை மகன் எடுத்த முடிவு