கள்ளத்தனமாக கள்ளக்காதலனுடன் உல்லாசம்... நேரில் பார்த்த கணவர்... இறுதியில் நேர்ந்த பயங்கரம்..!

Published : Feb 06, 2021, 01:26 PM IST
கள்ளத்தனமாக கள்ளக்காதலனுடன் உல்லாசம்... நேரில் பார்த்த கணவர்... இறுதியில் நேர்ந்த பயங்கரம்..!

சுருக்கம்

கள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை கொடூரமாக எரித்துக் கொன்றுவிட்டு  நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை கொடூரமாக எரித்துக் கொன்றுவிட்டு  நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தேனி மாவட்டம் க.புதுப்பட்டி அருகே இடையன்குளத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ம் தேதி சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார். உடனே அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் எரிந்த நிலையில் கிடந்தவரின் எலும்புகளை டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

இதனையடுத்து, டி.என்.ஏ. பரிசோதனையில் கொலை செய்யப்பட்டவர் தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள போயன்மார் தெருவைச் சேர்ந்த நாகராஜ் (42) என தெரியவந்தது. இது குறித்து அவரது மனைவி முத்துமாரி (37) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அவரது பேச்சு முன்னுக்கு பின் முரணாக  இருந்தது. இதனால், போலீசார் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். 

 

அதில், முத்துமாரிக்கும் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால், அடிக்கடி இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனை நேரில் பார்த்த கணவர் நாகராஜ் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் நாகராஜை தீர்த்து கட்ட முத்துமாரி மற்றும் செல்வராஜ் ஆகியோர் திட்டம் தீட்டினர்.  

அதன்படி சம்பவத்தன்று நாகராஜூக்கு அளவுக்கு அதிகமாக  போதையாக்கி அவரது கழுத்தை நெறித்து கொன்றனர். பின்னர் உடல் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டனர். இதனால், அடையாளம் காணமுடியாத அளவுக்கு கருகிய நிலையில் கிடந்தது. ஆனால் போலீசார் எலும்புகளை வைத்து டி.என்.ஏ. பரிசோதனை நடத்தியதில் கொலை செய்யப்பட்டவரின் விபரம் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து போலீசார் முத்துமாரியை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள செல்வராஜை தேடி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

அட பாவிங்களா... ரூ.3 கோடி பணம்.. அரசு வேலைக்காக பாம்பை ஏவி தந்தை கொ**.. மகன்களின் சதி அம்பலமானது எப்படி?
காலி பாட்டிலுக்காக 5 ரூபாய் தகராறு.. பட்டப்பகலில் 3 குழந்தைகளின் தந்தை ஓட ஓட விரட்டி கொ**..! தூத்துக்குடியில் பயங்கரம்