உல்லாசமாக இருக்கும் போது கதவை தட்டிய கணவர்.. கட்டிலுக்கு அடியில் ஒளிந்த கள்ளக்காதலன்.. இறுதியில் நேர்ந்த பகீர்

Published : Feb 04, 2021, 05:57 PM ISTUpdated : Feb 04, 2021, 05:58 PM IST
உல்லாசமாக இருக்கும் போது கதவை தட்டிய கணவர்.. கட்டிலுக்கு அடியில் ஒளிந்த கள்ளக்காதலன்.. இறுதியில் நேர்ந்த பகீர்

சுருக்கம்

கள்ளக்காதல் விவகாரம் கணவருக்கு தெரிய வந்ததால் அசிங்கம் தாங்கமல் மனைவி நாகலட்சுமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்காதல் விவகாரம் கணவருக்கு தெரிய வந்ததால் அசிங்கம் தாங்கமல் மனைவி நாகலட்சுமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த உள்ளியக்கோட்டையை சேர்ந்தவர் வேல்முருகன். இவருக்கு திருமணமாகி நாகலட்சுமி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். கரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் டெய்லராக வேல்முருகன் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், வேல்முருகனின் மனைவிக்கும், அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில், நேற்று பணி முடிந்து தாமதமாக நள்ளிரவு வேல்முருகன் வீடு திரும்பியுள்ளார். கதவை நீண்ட நேரம் தட்டியும் மனைவி நாகலட்சுமி திறக்கவில்லை. இதனையடுத்து, பதற்றத்துடன் கதவை வந்து திறந்தார். பின்னர், கணவர் உள்ளே சென்று தனது ஆடைகளை மாற்றும் போது, கட்டிலுக்கு அடியில் ரமேஷ் இருந்துள்ளார். ஆத்திரத்தில் ரமேஷ் மற்றும் நாகலட்சுமியை தாக்கிய வேல்முருகன், உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

ஆனால் காலை வந்து புகார் அளிக்குமாறு வேல்முருகனை போலீசார் திருப்பி அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், தனது கணவருக்கு தனது கள்ளக்காதல் தெரிந்ததால் அசிங்கம் தாங்காமல் நாகலட்சுமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

அட பாவிங்களா... ரூ.3 கோடி பணம்.. அரசு வேலைக்காக பாம்பை ஏவி தந்தை கொ**.. மகன்களின் சதி அம்பலமானது எப்படி?
காலி பாட்டிலுக்காக 5 ரூபாய் தகராறு.. பட்டப்பகலில் 3 குழந்தைகளின் தந்தை ஓட ஓட விரட்டி கொ**..! தூத்துக்குடியில் பயங்கரம்