கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் அவர்களுக்கிடையே கள்ளக்காதலாக மாறியது.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள முடிகண்டநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தமிழ்ச்செல்வன். இவரது மனைவி நந்தினி (வயது 32). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் உடல்நலக்குறைவால் கடந்த ஓராண்டுக்கு முன்பு செந்தமிழ்ச்செல்வன் உயிரிழந்தார். இதனால் நந்தினி தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். மேலும், அவர் சேத்தியாத்தோப்பு பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஒரு மளிகை கடையில் வேலை செய்து வருகிறார்.
கள்ளக்காதல் நந்தினி வேலை பார்த்து வரும் கடைக்கு எதிரே உள்ள பூக்கடையில் சேத்தியாத்தோப்பு புதுத்தெருவை சேர்ந்த தாமோதரன் மகன் மணிகண்டன்(35) என்பவர் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் அவர்களுக்கிடையே கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து மணிகண்டன், நந்தினியின் வீட்டுக்கு சென்று அவரது தனிமையில் சந்தித்து அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.
நேற்று இரவு மணிகண்டன், நந்தினியின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் வீட்டின் பின்புறம் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. கத்திக்குத்து அப்போது நந்தினியின் குழந்தை அழுதுள்ளது. இந்த சத்தம் கேட்ட அவர் குழந்தையை பார்ப்பதற்காக அங்கிருந்து செல்ல முயன்றார். உடனே மணிகண்டன், வீட்டுக்குள் செல்லக்கூடாது என நந்தினியை தடுத்ததாக தெரிகிறது. இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், ஆபாசமாக திட்டி கத்தியால் நந்தினியை குத்தினார்.
அப்போது அவர் வலியால் அலறி துடித்தார். இந்த சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து படுகாயமடைந்த நந்தினியை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சோழத்தரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க : திமுகவுடன் கூட்டணி வச்சது பெரிய தப்பு..என்ன பண்றது.! புலம்பும் கே.எஸ் அழகிரி !