முன்னாள் கவுன்சிலர் கழுத்தை அறுத்த மகன்கள்.. என்ன காரணம் தெரியுமா? வெளியான அதிர்ச்சி தகவல்.!

Published : May 24, 2022, 11:18 AM IST
முன்னாள் கவுன்சிலர் கழுத்தை அறுத்த மகன்கள்.. என்ன காரணம் தெரியுமா? வெளியான அதிர்ச்சி தகவல்.!

சுருக்கம்

நேற்று அதிகாலையில் விழுப்புரம் அடுத்துள்ள அகரம் செங்கமேடு செல்லும் சாலையில் கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

சொத்து பிரச்சனை காரணமாக தந்தையையே மகன்கள் ஸ்கெட்ச் போட்டு கழுத்தை அறுத்த சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் முன்னாள் நகரமன்ற உறுப்பினர் அகமது (57). இவர் விழுப்புரம் பகுதியில் வட்டிக்கு பணம் கொடுப்பது, டெண்டர் எடுப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று அதிகாலையில் விழுப்புரம் அடுத்துள்ள அகரம் செங்கமேடு செல்லும் சாலையில் கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது கழுத்துப் பகுதியின் குரல்வலையில் ஆழமாக அறுபட்டுள்ளதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.  சொத்து பிரச்சனை காரணமாக அகமது சென்ற காரை வழிமறித்த அவரின் இரு மகன்கள் மற்றும் அவரது நண்பர்கள் ஆகியோர் மற்றொரு காரில் அகமதை கடத்தி சென்று கத்தியால் கழுத்தை அறுத்து கீழே தள்ளிவிட்டு சென்றது தெரியவந்தது.  ஆள் கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள மகன்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!