
பேரக்குழந்தை வேண்டும் என்ற ஆசையில் தனது இரண்டு மகன்களை ஏவி மூத்த மருமகளை மாமியார் கற்பழிப்பு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இந்த கொடூரம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவற்றை தடுக்க எத்தனையோ சட்டதிட்டங்களை அரசு கொண்டு வந்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை, பல நேரங்களில் பெண்களுக்கு ஆண்கள் எதிரியாவதை விட பெண்களே பெண்களின் வன்கொடுமை காரணமாக அமைந்து வருகின்றனர். அந்த வரிசையில் மாமியாரே மருமகளை கற்பழிப்புக்கு ஆளாகியுள்ள சம்பவம் உ.பியில் அரங்கேறியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்குத் திருமணமாகி பல வருடங்கள் ஆகியும் குழந்தையில்லை. அந்த குடும்பத்தின் மூத்த மகனை அந்த பெண் திருமணம் செய்திருந்தார். இந்நிலையில் அந்த பெண்ணின் மாமியாருக்கு பேரக்குழந்தையை தூக்கி கொஞ்ச வேண்டும் என நீண்ட நாட்களாக ஆசை இருந்தது.
ஆனால் மருமகள் கர்ப்பம் தரிக்காத காரணத்தால் அந்தப் பெண் மருமகளை எப்படியாவது கர்ப்பதாக்க வேண்டும் என முடிவு கட்டினார். அப்போது தனது 2 இளைய மகன்களை மருகளின் அறைக்கு அனுப்பி அந்த பெண்ணை கற்பழிக்குமாறு கூறியதாக கூறப்படுகிறது, அதேபோல அந்த பெண்ணின் மைத்துனர்கள் இருவரும் அந்த பெண்ணின் அறைக்குச் சென்று அண்ணன் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மருமகள் அது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போலீசார் அந்தப் பெண்ணின் மாமியார் மற்றும் மைத்துனர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து டிஎஸ்பி சிட்டி ராஜேஷ்குமார் சிங் கூறுகையில், கோட்வாலி பகுதியிலுள்ள ஒரு பெண் தனது கணவரின் பலவீனம் காரணமாக திருமணம் ஆகியும் கர்ப்பம் தரிக்க வில்லை, இந்நிலையில் அந்தப் பெண்ணின் மாமியார் இரண்டு இளைஞர்களை வெவ்வேறு நாட்களில் அந்தப் பெண்ணின் அறைக்கு அனுப்பி பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் வந்துள்ளது. இதுகுறித்து விசாரித்தபோது பேரன் வேண்டும் என்ற ஆசையில் மாமியார் இப்படி தவறாக செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். பேரன் வேண்டும் என்பதற்காக மாமியாரே மருமகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.