
கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு முன் ஜாமீன் வழங்குவது குறித்து முடிவு எடுக்க இயலாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. அதாவது கோகுல்ராஜ் உள்ளிட்ட 10 பேருக்கான வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை திட்டவட்டமாக கூறியுள்ளது.
சேலம் மாவட்டம்: ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி மாணவர் கோகுல்ராஜ் தலை துண்டிக்கப்பட்ட கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏழு ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த சாதி ஆணவக் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக யுவராஜ் சாகும்வரை சிறையில் இருக்கவேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கு விசாரணையில் திடுக்கிடும் திருப்பங்கள் ஏற்பட்ட நிலையில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது. காதல் தோல்வியால் 2015 ஜூன் 24ஆம் தேதி ரயில் தண்டவாளத்தில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார் என கூறப்பட்டது. ஆனால் உடல் பிரேத பரிசோதனை அறிக்கை, உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் கோகுல்ராஜ் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதையடுத்து சேலம் மருத்துவமனைக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது, மேலும் அவரது வழக்கில் சிசிடிவி காட்சிகள், தொடர் விசாரணை மூலம் கோகுல்ராஜ் தற்கொலை செய்துகொள்ளவில்லை அது ஆணவப்படுகொலை என உறுதியானது. இதில் முதல் குற்றவாளியான தீரன் சின்னமலை பேரவையின் தலைவர் யுவராஜ் உள்ளிட்ட பத்து பேருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் முதல் குற்றவாளியான யுவராஜ் இருக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சம்பத்குமார் தீர்ப்பளித்தார். யுவராஜ் சாகும் வரை சிறையில் இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. யுவராஜியின் கார் டிரைவருக்கு மூன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு கூட்டாளிகள் 8 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த தீர்ப்பு தமிழகம் முழுவதும் மிகுந்த வரவேற்பு பாராட்டையும் பெற்றது.
இந்நிலையில் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து செய்ய கோரியும் ஜாமீன் வழங்க கோரியும் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதே நேரத்தில் கொலை குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது தண்டனை ரத்து செய்யக்கூடாது என கோகுல்ராஜின் தாயார் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் ஜாமீன் கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. கோகுல் ராஜ் கொலை வழக்கில் 10 பேரின் தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது என நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்ததுடன், கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை கீழமை நீதிமன்றத்தில் இருந்து பெற நீதித்துறை பதிவாளருக்கும் ஆணையிடப்பட்டுள்ளது. கீழமை நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்கக் கோரி வழக்கின் இறுதி விசாரணையை ஜூலை 6க்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.