ஃபேஸ்புக்கில் பழகிய பெண்... சபலப்பட்ட இளைஞனை நேரில் வரவழைத்து... நிர்வாணமாக்கி...

Published : Sep 08, 2020, 06:15 PM IST
ஃபேஸ்புக்கில் பழகிய பெண்... சபலப்பட்ட இளைஞனை நேரில் வரவழைத்து... நிர்வாணமாக்கி...

சுருக்கம்

ஃபேஸ்புக் மூலம் பழகிய பெண்ணை நேரில் பார்க்க சென்ற வாலிபர் ஒருவர் நிர்வாணமாக்கப்பட்டு அடித்து துரத்தப்பட்ட சம்பவம் கடலூர் அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

ஃபேஸ்புக் மூலம் பழகிய பெண்ணை நேரில் பார்க்க சென்ற வாலிபர் ஒருவர் நிர்வாணமாக்கப்பட்டு அடித்து துரத்தப்பட்ட சம்பவம் கடலூர் அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

கடலூர் மாவட்டம், பண்ருட்டியை சேர்ந்த 28 வயது வாலிபர் வினோத்குமார். வெப் டிசைனராக பணியாற்றி வரும் இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது. இருந்தும் ஃபேஸ்புக்கில் நிஷா என்ற பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண் அவ்வப்போது ஆபாச புகைப்படங்களை அனுப்பி வினோத்குமாரின் சபலத்தை தூண்டி விட்டுள்ளார். இதனை அடுத்து சபலத்திற்கு ஆளான வினோத்குமார் நிஷாவுடன் அடிக்கடி தொலைபேசி மூலம் பேசியுள்ளார்.

இந்நிலையில் வினோத்குமாரை நேரில் சந்திக்க நிஷா அழைத்ததாக தெரிகிறது. இதனை அடுத்து பண்ருட்டியில் இருந்து திருச்சிக்கு பைக்கில் சென்ற வினோத்குமார் நிஷா கூறிய இடத்திற்கு சென்று அவரை நேரில் பார்த்து அவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு மறைந்திருந்த 6 பேர் கொண்ட கும்பல் வினோத்குமாரை சரமாரியாக தாக்கி அவரிடமிருந்த பர்ஸ், ஸ்மார்ட்போன், ஏடிஎம் கார்டு மற்றும் பைக் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அவரை நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்துள்ளனர்.

இதனை அடுத்து அங்கிருந்த ஒரு சில நபர்களிடம் துணியை வரவழைத்து அணிந்து கொண்ட வினோத்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் எடுத்த அதிரடி நடவடிக்கையின் மூலம் நிஷா உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இன்னும் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
 

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!