இனி கடனை கேட்டு வீட்டுக்கு வருவீங்க... வங்கிகளுக்கு ஆப்பு வைக்கும் காவல்துறை..!

Published : Sep 08, 2020, 12:59 PM IST
இனி கடனை கேட்டு வீட்டுக்கு வருவீங்க... வங்கிகளுக்கு ஆப்பு வைக்கும் காவல்துறை..!

சுருக்கம்

பாதிக்கப்பட்ட நபர் 100 என்ற அவசர எண்ணிற்கோ, அல்லது அருகில் உள்ள காவல்நிளையத்திற்கோ சென்று புகார் கொடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது

வங்கிகளில் வாங்கிய கடனை கேட்டு வீட்டிற்கு ஆள் அனுப்பினால் போலீசில் புகார் தெரிவிக்கலாம் என காவல்த்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக அனைவரது இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை விட பொருளாதார சரிவு, நிதி நெருக்கடி என பொது மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் நடுத்தர மற்றும் எளிய மக்கள் வங்கிகளில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

வங்கிகளில் வாகன கடன், வீட்டுக்கடன் போன்றவை வாங்கியவர்கள் 6 மாதங்கள் தவணை செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் மத்திய அரசின் இந்த உத்தரவை பல வங்கி, நிதி நிறுவனங்கள் கண்டுக்கொள்ளவில்லை என குற்றசாட்டு எழுந்துள்ளது. கட்டாத தவணைக்கு வட்டி போடுவது, தொடர்ந்து போன் செய்து பணம் கேட்பது, வீட்டிற்கு ஆள் அனுப்பி மிரட்டுவது, அவமானப்படுத்துவது என பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகிறது.

இந்நிலையில் ‘வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், பணத்தை கேட்கவும் வங்கிகளுக்கு அதிகாரம் உண்டு. ஆனால் வீட்டிற்கு ஆள் அனுப்பி மிரட்டுவது, பணத்தை கேட்டு அவமானப்படுத்துவது போன்றவைகளை செய்ய வங்கிகளுக்கு அதிகாரம் இல்லை. இவ்வாறு வங்கிகள் செய்யும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட நபர் 100 என்ற அவசர எண்ணிற்கோ, அல்லது அருகில் உள்ள காவல்நிளையத்திற்கோ சென்று புகார் கொடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது” என காவல்துறை மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!