இரவில் குடித்துவிட்டு மட்டையான கணவன்... தினம் கள்ளக் காதலுடன் தனிமையில் உல்லாசம் அனுபவித்த மனைவி.

Published : Jul 08, 2022, 06:08 PM IST
இரவில் குடித்துவிட்டு மட்டையான கணவன்... தினம் கள்ளக் காதலுடன் தனிமையில் உல்லாசம் அனுபவித்த மனைவி.

சுருக்கம்

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்துவிட்டு ஓய்வூதியம் பெற முயற்சித்த மனைவி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்தில் நடந்துள்ளது . 

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்துவிட்டு ஓய்வூதியம் பெற முயற்சித்த மனைவி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. பெரும்பாலான கொலை, தற்கொலைகள் கள்ளக்காதலை மையமாக வைத்து அரங்கேறி வருகிறது. அந்த வகையில் தினமும்  குடித்துவிட்டு மனைவியை கணவன் கண்டுகொள்ளாமல் இருந்து வந்த நிலையில் மனைவி வேறொருவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு ஒரு கட்டத்தில் கணவனையே தீர்த்துக்கட்டியுள்ள கொடூரம் நடந்துள்ளது. முழு விவரம் பின்வருமாறு:- 

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் பத்தவடுகூரில் லைன் மேனாக பணிபுரிந்து வந்தவர் அசோக் குமார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கவிதா என்ற பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் கணவர் அசோக்குமார் மதுப்பழக்கத்திற்கு அடிமையானார். இதனால் அவருக்கும் மனைவிக்கும் இடைவெளி அதிகமானது, இந்நிலையில் பக்கத்து ஊரான பாசினப்பள்ளி  சேர்ந்த அரிகிருஷ்ணன் துணி வியாபாரம் செய்து வந்தார், அப்போது அவருடன் கவிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் கைபேசியில் மணிக்கணக்கில் பேசி வந்தனர், பின்னர் இருவருக்கும் இடையே அது கள்ளக்காதலாக மாறியது. அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். கணவன் தினம் மதுபோதையில்  உறங்கி விடுவதால் ஹரி கிருஷ்ணன் கவிதாவின் வீட்டுக்கே வந்து உல்லாசம் அனுபவித்து வந்ததாக தெரிகிறது, அரிகிருஷ்ணனும் தன் பங்குக்கு அசோக் குமாருக்கு பணம்கொடுத்து அவரை மது அருந்த வைத்துவிட்டு வீட்டுக்கே சென்று கவிதாவுடன் நேரத்தை செலவிட்டு வந்தார். ஒரு கட்டத்தில் அரிகிருஷ்ணனை கவிதாவுக்கு அதிகம் பிடித்துப்போகவே கணவன் அசோக்குமாரை தீர்த்து கட்டிவிட்டு அதன் மூலம் வரும் ஓய்வூதியத்தை பெற்றுக்கொண்டு நிம்மதியாக அரிகிருஷ்ணனுடன் குடும்பம் நடத்தலாம் என முடிவு செய்தார்.

இந்நிலையில் அசோக்குமாரை தீர்த்து கட்ட முடிவு செய்த கவிதா அரிகிருஷ்ணன் ஜோடி ஏப்ரல் 12ஆம் தேதி அசோக் குமாருக்கு மது வாங்கி கொடுத்தனர். அப்போது அவர் ஆர்.எஸ் புறநகர் ரயில் பாலம் அருகே உள்ள பாலண்ணா  தண்ணீர் தொட்டி அருகே மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற கவிதாவும் அரிகிருஷ்ணன் அசோக்குமாரை நீரில் மூழ்கடித்து படுகொலை செய்தனர். பின்னர் வேலைக்கு சென்ற கணவர் வீடு திரும்பவில்லை என கவிதா காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். பின்னர் அசோக்குமாரின் சடலம் குளத்தில் மிதப்பதை அறிந்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அப்போது மருத்துவ பரிசோதனை அறிக்கையில் தவறிவிழுந்து இறக்கவில்லை, யாரோ அவரை வலுக்கட்டாயமாக அழுத்தி கொலை செய்துள்ளனர் என ரிப்போர்ட் வெளியானது. இதையடுத்து மாணவி கவிதாவிடம் சந்தேகத்தின்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், கொலை விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. காதலனுடன் சேர்ந்து கவிதா கணவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

போட்டு தாக்கிய குளிரால் அலறிய பொதுமக்கள்! மீண்டும் சென்னையில் ஆட்டத்தை ஆரம்பித்த மழை
கதறிய 9ம் வகுப்பு பள்ளி மாணவன்.. ஓயாமல் 4 பேர் டார்ச்சர்.. கட்டாய ஓரின**சேர்க்கையால் அதிர்ச்சி!