முதலிரவில் கணவனிடம் மனைவி மதுபாட்டில் கேட்டுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கணவன் அதை மறுத்ததால் காலையில் 10 பவுன் நகையுடன் மனைவி மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலிரவில் கணவனிடம் மனைவி மதுபாட்டில் கேட்டுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கணவன் அதை மறுத்ததால் காலையில் 10 பவுன் நகையுடன் மனைவி மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம் என்ற போர்வையில் நடைபெறும் மோசடி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, திருமணம் செய்து கொள்வதாக கூறி கற்பழித்து ஏமாற்றுவது, திருமணம் செய்துகொண்டு வரதட்சணை கேட்டு கொடுமை செய்வது, இதேபோல் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஆண்களை மயக்கி பணம் நகையுடன் பெண்கள் மாயமாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது, பெரும்பாலும் இதுபோன்ற சம்பவங்கள் வட மாநிலத்தில் அதிகமாக நடந்து வரும் நிலையில் தற்போது தமிழகத்திலும் இது அரங்கேறியுள்ளது. சென்னையை அடுத்துள்ள பள்ளிக்கரணையில் வசித்து வருபவர் தமிழ்வாணன் (32) சேலத்தை பூர்வீகமாக கொண்டவர் ஆவார். கடந்த சில ஆண்டுகளாக பெண் பார்க்கும் படலம் நடந்து வருகிறது, ஆனால் பெண் அமையாததால் மன உளைச்சலுக்கு ஆளானார்.
இந் நிலையில் சேலத்தை சேர்ந்த திருமண தரகர் மகேஷ் என்பவர் மூலம் தமிழ்வாணனுக்கு வரன் அமைந்தது. மகேஷ் விருதுநகரைச் சேர்ந்த பூஜா (35) என்ற பெண்ணை அறிமுகம் செய்து வைத்தார், இதனை அடுத்து கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ்வாணன் தனது குடும்பத்தாருடன் விருதுநகர் முருகன் கோயிலுக்கு சென்றார், அங்கே இருவரும் சந்தித்துக் கொண்டனர். அப்போது தமிழ்வாணனுக்கு பூஜாவை மிகவும் பிடித்துவிட்டது. உடனே திருமணம் செய்துகொள்ள சம்மதித்தார். தமிழ் வாணனுக்கு பூஜாவை அதிகம் பிடித்துப் போனதால் தரகர் மகேஷ் அதை சாதகமாக பயன்படுத்தி இரண்டு லட்சம் ரூபாயை தரும்படி கூறினார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தமிழ்வாணன் பெண் தரத்துக்கு இத்தனை லட்சம் தர வேண்டுமா எனக் கேட்டுள்ளார்,
பிறகு பேசி ஒரு வழியாக 1. 35 லட்ச ரூபாய் மகேஷுக்கு அங்கேயே கொடுத்தார் தமிழ்வாணன், பின்னர் பூஜாவுக்கும் தமிழ்வாணன் கோவிலில் வைத்தே தாலி கட்டினார். பூஜாவுக்கு உறவினர்கள் யாரும் இல்லாததால் அங்கேயே திருமணம் முடிந்தது. திருமணம் நடந்த கையை தமிழ்வாணன் பூஜாவை சேலத்திற்கு அழைத்து வந்தார். தமிழ்வாணன் சேலத்தில் இருந்து அன்று இரவே புறப்பட்டு பள்ளிக்கரணை வீட்டுக்கு மனைவி பூஜாவுடன் வந்தார். பின்னர் முதல் இரவு ஏற்பாடு செய்யப்பட்டது, அப்போது பூஜா தமிழ்வாணனிடம் தனக்கு மது பாட்டில் வேண்டும் என கேட்டுள்ளார், அதைக்கேட்டு அதிர்ந்துபோன தமிழ்வாணன், இதெல்லாம் தவறு, திருமணத்திற்கு முன்பு நீ எப்படி இருந்தாய் என்பதெல்லாம் தெரியாது, இனி ஒழுக்கமாக இருக்க வேண்டும் என கண்டிஷன் போட்டுள்ளார்.
பூஜாவும் பதிலுக்கு மாதவிடாய் நாள் என்பதால் முதலிரவை தள்ளிப் போடும்படி தமிழிடம் கூறியுள்ளார். பிறகு மறுநாள் மனைவிக்கு புது புடவை வாங்கித் தர சென்னையில் உள்ள பிரபல துணிக்கடைக்கு கூட்டிச் சென்றார் தமிழ், அங்கு புடவை வாங்கி முடித்த பின்னர் வீட்டுக்குப் புறப்பட்டனர், அப்போது பூஜா எக்ஸெலேட்டர் என்றால் பயம் நீங்கள் போங்கள் நான் மெதுவாக படிக்கட்டில் வருகிறேன் என கூறி தமிழை எக்ஸலேட்டரில் அனுப்பி வைத்தார். கிழே வந்து பூஜாவுக்காக தமிழ் காத்திருந்தார் ஆனால் பூஜா வரவே இல்லை. பூஜாவின் செல்போனுக்கு கால் செய்தார் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பதட்டத்துடன் வீட்டிற்கு சென்று பார்க்கையில் வீட்டில் 10 ஆயிரம் ரூபாய் பணம், பீரோவில் இருந்த 10 சவரன் நகை காணாமல் போயிருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த தமிழ் வாணன், இதுகுறித்து காவல் நிலைத்தில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.