மகாராஷ்டிராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9பேர் பலி! கொலையா? தற்கொலையா என போலீசார் விசாரணை!

Published : Jun 20, 2022, 04:21 PM IST
மகாராஷ்டிராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9பேர் பலி! கொலையா? தற்கொலையா என போலீசார் விசாரணை!

சுருக்கம்

மகாராஷ்டிரா மாநிலம் சாங்கிலி மாவட்டம் மஹிசால் நகரில்,  அருகருகே அமைந்த இரு குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரின் சடலங்களை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தம்பியான மானிக் மற்றும் போபட் எல்லபா இரண்டு பேர் அருகருகே உள்ள குடியிருப்புகளில் வசித்து  வந்தனர். மூத்த சகோதரர் மானிக்கின் வீட்டில் அவரது தாய், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மானிக் அப்பகுதியில் கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்தார். இளைய சகோதரர் போபட் எல்லப்பா வீட்டில், அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இவர்கள் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து அக்கம்பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், உடல்களை கைற்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  முழுமையான அறிக்கை வந்த பிறகே இது கொலையா? தற்கொலையா என்பது தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிந்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்பட்டுத்தியுள்ளது.

மேலும் படிக்க ; நள்ளிரவில் பேத்தி வீட்டிற்கு சென்ற தாத்தா ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க வெட்டி படுகொலை.. உறவினர்கள் வெறிச்செயல்
 

PREV
click me!

Recommended Stories

பெற்ற குழந்தையை கொன்ற கொடூர தாய்.. கோர்ட் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு.. கள்ளக்காதலன் எஸ்கேப்..
லெஸ்பியன் உறவு! மால்தி தேவியுடன் மனைவி உல்லாசம்! நேரில் பார்த்த கணவர்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!