
கல்லூரி பேராசிரியர் கணவனை விவாகரத்து செய்த இளம்பெண் ஹோட்டலில் அறை எடுத்து மூன்று காவலர்களுடன் உல்லாசத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் அந்தப் பெண் மீது கணவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்தச் சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருமணத்திற்கு புறம்பான சம்பவங்கள் பெரும்பாலும் கொலை, தற்கொலையில் முடிகிறது. தம்பதியரிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள் பெரும்பாலும் திருமணத்திற்கு புறம்பான உறவுக்கு வழிவகுக்கிறது. தங்களின் தனிப்பட்ட சுகத்துக்காக ஒட்டுமொத்த குடும்பத்தின் கௌரவம் காற்றில் பறக்க விடப்படுகிறது, சிலருக்கு நல்ல வசதி வாய்ப்புடன் கூடிய குடும்பச்சூழல் அமைந்தாலும் திருமணத்திற்கு புறம்பான உறவில் சிக்கிக் கொள்கின்றனர். அதுபோன்ற பெண்களின் வாழ்க்கை தறிகெட்டு எதிர்காலமே கேள்விக்குறியாகும் நிலைமைக்கும் தள்ளப்படுகிறது. அப்படியான ஒரு சம்பவம் ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் நடந்துள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு கல்லூரி பேராசிரியர் ஒருவர் இளம் பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்த நிலையில் 2019ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். அன்றுமுதல் மனைவி தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். அவரிடம் இருந்து விவாகரத்து பெற வழக்கு தொடுத்துள்ள அவர் ஜீவனாம்சம் கோரியுள்ளார். அதற்கான வழக்கு நீதிமன்றத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் தனது விவாகரத்துக்கு உதவிய சில காவலர்களுடன் அவரது மனைவிக்கும் ஓட்டலில் அறை எடுத்து உல்லாசம் அனுபவித்து வந்தார்.
இதுகுறித்து விரிவுரையாளர் கணவருக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் அவர் ஓட்டலுக்கு சென்று நேரடியாக ஆய்வு செய்தார். அப்போது மனைவி 3 காவலர்களுடன் உல்லாசத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார், அதை அவர்கள் தனது செல்போனில் வீடியோ எடுத்ததாக தெரிகிறது. இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில் எனக்கும் எனது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக என் மனைவி கடந்த சில ஆண்டுகளாக அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார். மாதந்தோறும் அவருக்கு செலவுக்கு பணம் வழங்கிக் கொண்டிருக்கிறேன்.என் மனைவியை விவாகரத்து செய்ய உதவிய காவலர்களுடன் அவர் நெருங்கி பழகி வந்துள்ளார்.
இந்நிலையில் 3 காவலர்களுடன் அவர் ஓட்டலில் அறை எடுத்து உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக காவல் துறை அதிகாரியை சந்தித்து புகார் அளித்துள்ளேன். இதற்கிடையில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் எனது வாகனத்தை வழிமறித்து தாக்கியுள்ளனர். பின்னர் வேறோரு வாகனத்தின் மூலம் எஸ்பி அலுவலத்திற்கு சென்று புகார் அளித்துள்ளேன். பலோத்ரா காவல்நிலையத்தில் மூன்று கான்ஸ்டபிள்கள் எனக்கு மனைவியுடன் தகாத உறவு வைத்துள்ளனர்.
காவலர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எனது புகாரில் வலியுறுத்தியுள்ளேன் என்றார். விரிவுரையாளர் அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் உயர் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.