வீட்டுப் பாடம் செய்யாததால் ஸ்கேலால் அடித்த ஆசிரியர்.. கோமாவுக்கு போன 2 ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு.

By Ezhilarasan BabuFirst Published Sep 7, 2022, 11:43 AM IST
Highlights

வீட்டுப்பாடம் செய்யாததால்  ஸ்கேலால் ஆசிரியர் தாக்கியதில் 2ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத் தனியார் பள்ளியில் இந்த கொடுமை அரங்கேறியுள்ளது.

வீட்டுப்பாடம் செய்யாததால்  ஸ்கேலால் ஆசிரியர் தாக்கியதில் 2ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத் தனியார் பள்ளியில் இந்த கொடுமை அரங்கேறியுள்ளது.

பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் அரசுப்பள்ளியில் படிப்பது கௌரவக் குறைச்சலாக கருதுகின்றனர், சமூக அந்தஸ்துக்காக பெரும்பாலானோர் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர், அங்கு படித்தால்தான் ஒழுக்கம் கல்வி கிடைக்குமென அவர்களின் குருட்டுத்தனமான நம்புவதே இதற்கு காரணம். கடன்வுடன் பட்டு ஆயிரக்கணக்கில் கட்டணம் செலுத்தி கார்ப்பரேட் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்கின்றனர், அதிலும் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அவர்களிடம் மேலோங்கி உள்ளது.

இந்நிலையில் சிறு தவறு செய்தால் கூட குழந்தைகளை எதிரிகளைப் போல பாவிக்கும் மனநிலையில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்த வரிசையில் வீட்டுப்பாடம் செய்யாத 2 ஆம் வகுப்பு மாணவியை பள்ளி ஆசிரியர் தாக்கியதில் அச்சிறுமி உயிரிழந்துள்ள கொடூரம் நடந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் போதன் ரோடு என்ஆர்ஐ காலணியில் வுட் பிரிட்ஜ்  என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. 

இதையும் படியுங்கள்: போலீஸ் எச்சரித்தும்.. என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது.. சவால் விட்ட ஓலை சரவணனை சமாதியாக்கிய கும்பல்.!

ஏராளமான மாணவ மாணவிகள் அங்கு பயின்று வருகின்றனர். அதே பகுதியை சேர்ந்த 7 வயதான பாத்திமா என்ற மாணவி இரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார், அந்த மாணவியை வீட்டுப்பாடம் செய்து வரவில்லை என கூறப்படுகிறது, இந்நிலையில்தான் அந்த மாணவிக்கு ஆசிரியை பனிஷ்மென்ட் கொடுக்க ஆரம்பித்தார்,  புத்தகங்களை மாணவி தோளில் சுமந்தபடி மாணவி வகுப்பறையை வலம் வர வேண்டும் என்ற கூறிய ஆசிரியர் அந்த மாணவியை ஸ்கேலால் தலையில் அடித்துக் கொண்டே இருந்துள்ளார். அப்போது திடீரென அந்த மாணவி மயங்கி விழுந்தார்.

இதையடுத்து பெற்றோர்கள் நிஜாமாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர், பரிசோதித்த மருத்துவர்கள் மூளையில் ரத்தம் உரைந்துள்ளதாகவும் குழந்தையின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறினார், மேல்சிகிச்சைக்காக குழந்தை ஐதராபாத் அனுப்பி வைக்கப்பட்டது, ஆனால் நேற்று குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது, படித்து உயர்ந்த நிலைக்கு வருவார் என பள்ளிக்கூடத்தில் ஆசையாக ஆசையாக சேர்த்த பெற்றோர்கள் அச் செய்தி கேட்டு நொறுங்கி போயினர், குழந்தை என்றும் பாராமல் ஆசிரியர் கொடுத்த தண்டனையில் பாத்திமாவின் உயிர் பறிபோயுள்ளது.

இதையும் படியுங்கள்: கல்யாணம்செய்து கொள்வதாக ஆசை வார்த்தை... Night duty நர்சை இழுத்துப்போட்டு நாசம் செய்த டாக்டர்.. கிரேட் எஸ்கேப்.

இந்நிலையில் பெற்றோர் பள்ளிக்கூட நிர்வாகம், ஆசிரியர் மீது புகார் கொடுத்துள்ளனர். குழந்தை உயிரிழந்த செய்தி அறிந்த பள்ளி நிர்வாகம் பள்ளிக்கு விடுமுறை அளித்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த நிஜாமாபாத் மண்டல கல்வி அதிகாரிகள் பள்ளிக்கூடத்தை ஆய்வு செய்தனர், குழந்தையை கண்மூடித்தனமாக தாக்கிய ஆசிரியர் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாணவர் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். பள்ளிக்கூடத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன, ஆசிரியர் அடித்ததில் பள்ளிச் சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

click me!