தனியாக இருந்த கள்ளக்காதல் ஜோடி.. வெளியே கசிந்த விவகாரம் - கடைசியில் நடந்த விபரீதம்

Published : Jun 12, 2022, 12:00 PM IST
தனியாக இருந்த கள்ளக்காதல் ஜோடி.. வெளியே கசிந்த விவகாரம் - கடைசியில் நடந்த விபரீதம்

சுருக்கம்

கள்ளக்குறிச்சியில் கணவன், மனைவி என்று கூறி வாடகை வீட்டில் தங்கியிருந்தவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த கொசப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் குமரவேல் மகன் ரமேஷ், (வயது 42) தனியார் பஸ் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஒரு மகள், 2 மகன்களும் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்தவர் தங்கமணி மனைவி ரஞ்சிதா, (28). இவருக்கும் 2 குழந்தைகள் உள்ளனர். இதில் ரமேஷ் மனைவியை பிரிந்தும், அதே பகுதியை சேர்ந்த ரஞ்சிதா கணவரை பிரிந்தும் வாழ்ந்து வந்துள்ளனர். 

ரமேஷ் மற்றும் ரஞ்சிதா இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நீடித்து வந்த நிலையில், அண்மையில் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி சின்ன சேலம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் ரமேஷ் கொசப்பாடி கிராமத்தில் உள்ள தனது உறவினருக்கு மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டு, நானும், ரஞ்சிதாவும் தற்கொலை செய்து கொள்ளப் போகிறோம் என கூறியுள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த ரமேஷ் உறவினர்கள் இரவு 8 மணியளவில் சின்னசேலத்தில் ரமேஷ் தங்கியிருந்த வீட்டிற்கு வந்து பார்த்தனர். அங்கு ரமேஷ் விஷம் குடித்தும், ரஞ்சிதா துாக்குப் போட்டும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவலறிந்து வந்த போலீசார் இருவர் உடலையும் கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இறந்தவர்கள் உண்மையிலேயே தற்கொலை செய்துகொண்டார்களா அல்லது உறவினர்களால் கொல்லப்பட்டனரா என்ற கோணத்தில் விசாரித்துவருகின்றனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Sonu Sood : நான்கு கை, நான்கு கால்களுடன் பிறந்த குழந்தை.. நடிகர் சோனு சூட் செய்த நெகிழ்ச்சி செயல்.!

இதையும் படிங்க : சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம்.. இந்து சமய அறநிலையத்துறை எடுத்த அதிரடி முடிவு ! பிரச்னை ஓயுமா ?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!