தாய் மீதே பாலியல் புகார் கூறிய மகன்... இறுதியில் வெளியான உண்மை... தாய்மையை தலைகுனிய வைத்த குற்றச்சாட்டு..!

Published : Jun 22, 2021, 06:19 PM IST
தாய் மீதே பாலியல் புகார் கூறிய மகன்... இறுதியில் வெளியான உண்மை... தாய்மையை தலைகுனிய வைத்த குற்றச்சாட்டு..!

சுருக்கம்

 தாய் அவனை கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட கோபத்தால் தான் தன்னுடைய தாய் மீது பொய்யான புகார் கூறியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளதாக உண்மை வெளிப்பட்டது. 

ஆபாச படம் பார்த்த மகனை தட்டிக்கேட்ட தாய்மீது பாலியல் பலாத்கார புகார் கூறிய 14 வயது மகனை சிறப்பு அதிகாரி விசாரணை செய்தபோது அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளியாகி இருக்கிறது. 

கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே கடக்காவூரை சேர்ந்தவர் அந்த 37 வயது பெண். இவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். கணவர் துபாயில் பணிபுரிந்து வருகிறார். தம்பதிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டதை அடுத்து அந்த பெண் வேறு திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து அந்த பெண் மீது முதல் கணவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கடக்காவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தனது 14 வயது மகனை தன்னுடைய மனைவி பலாத்காரம் செய்ததாக கூறியிருந்தார்.

இது தொடர்பாக காவல்துறையினர் அந்த பெண்ணை போக்சோ வழக்கில் பதிவு செய்து செய்தனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே தான் தவறு செய்யவில்லை என்றும், தன்மீது பொய்யான குற்றச்சாட்டு கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என்றும், எனவே உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அந்த பெண் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற புகாரில் சந்தேகம் இருக்கிறது என்றும், ஒரு பெண் ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இது தவிர அந்த பெண்ணுக்கு ஜாமின் வழங்கவும் உத்தரவிட்டது. இதையடுத்து ஒரு மாதத்துக்கு பிறகு அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இதற்கிடையே வழக்கை விசாரிக்க ஐபிஎஸ் அதிகாரியான திவ்யா கோபிநாத் நியமிக்கப்பட்டார். சிறுவனுக்கு கவுன்சிலிங் அளித்து, மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டது. இதுதொடர்பான விசாரணை அறிக்கையை திவ்யா கோபிநாத் கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். 

அந்த அறிக்கையில்  14 வயது சிறுவனை தாய் பலாத்காரம் செய்ததாக கூறப்பட்ட புகாரில் உண்மையில்லை. சிறுவன் அடிக்கடி தாயின் செல்போனில் ஆபாச படங்களை பார்த்து வந்துள்ளார். இதை அறிந்த தாய் அவனை கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட கோபத்தால் தான் தன்னுடைய தாய் மீது பொய்யான புகார் கூறியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளதாக உண்மை வெளிப்பட்டது. 

PREV
click me!

Recommended Stories

அடச்சீ.. இப்படி ஒரு தாயா? 31 வயது கள்ளக்காதலனுக்கு 18 வயது மகளை திருமணம் செய்து வைத்த கொடூரம்
பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி.. காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. கணவன் கண்முன்னே அலறிய மனைவி..