மேஸ்திரியை கடத்தி உல்லாசம்... போலீஸிடம் சிக்கிய சமையல்காரியின் அதிர்ச்சி லீலைகள்!

Published : Jan 09, 2019, 07:00 PM IST
மேஸ்திரியை கடத்தி உல்லாசம்... போலீஸிடம் சிக்கிய சமையல்காரியின் அதிர்ச்சி லீலைகள்!

சுருக்கம்

சென்னை வில்லிவாக்கத்தில் கடத்தப்பட்ட மேஸ்திரியின் வழக்கில், சமையல்காரியுடன் அவரது கள்ளக்காதல் லீலைகள் வெட்டவெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

சென்னை வில்லிவாக்கத்தில் கடத்தப்பட்ட மேஸ்திரியின் வழக்கில், சமையல்காரியுடன் அவரது கள்ளக்காதல் லீலைகள் வெட்டவெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

சென்னை, வில்லிவாக்கம் பகுதியில் ரயில்வே ஊழியர்கள் குடியிருப்புக்காக கட்டுமானப்பணி நடைபெற்று வருகின்றன. இந்தப்பணிகளை துரிதப்படுத்தி கட்டட வேலைகள் நடைபெற்று வருகிறது. இங்கு பல மாதங்களாக தலைமை மேஸ்திரியாக மேற்குவங்கத்தை சேர்ந்த அபிஜித் தாஸ் வேலை செய்து வருகிறார்.

வேலை நடைபெறும் இடத்திலேயே தங்கி வந்துள்ளார். இந்நிலையில் அபிஜித் தாஸை, அங்கு சமையல் வேலை செய்யும் ஜோஸன்னா என்ற பெண் கடத்தி சென்று விட்டதாக புகார் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மேஸ்திரி அபிஜித் தாஸுக்கும், ஜோசன்னாவிற்கும் தகாத உறவு இருந்ததும், இருவரும் அவ்வப்போது உல்லாசமாக இருந்ததும் தெரியவந்தது. மேஸ்திரியிடம் பணம் இருப்பதை அறிந்து கொண்ட ஜோசன்னா ஆட்களை ஏவி விட்டு அபிஜித் தாஸை கடத்தியது தெரிய வந்தது. பின்னர் அவரிடமிருந்த 30 ஆயிரத்தை பறித்துள்ளனர்.

இறுதியில் காவல்துறையினர்,  ஜோசன்னாவின் பிடியிலிருந்து அபிஜித் தாஸை மீட்டனர். ஜோசன்னாவையும் கடத்தலுக்கு உடந்தையாக இருந்தவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

PREV
click me!

Recommended Stories

Babita Singh Reporting: ஒரு கொலை.. பல சந்தேகங்கள்! வீட்டுக்குள்ளேயே மறைந்திருக்கும் அதிர்ச்சி ரகசியம் – படம் எப்படி இருக்கு?
திருமணத் தடையை நீக்குவதாகக் கூறி இளம் பெண்ணை ஏமாற்றிய ஜோதிடர்..! கோவையில் பரபரப்பு