கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவன்.. ஆண் நண்பருடன் மனைவி போட்ட பிளான் - சோகத்தில் முடிந்த சம்பவம்

Published : Sep 05, 2022, 04:03 PM ISTUpdated : Sep 05, 2022, 04:05 PM IST
கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவன்.. ஆண் நண்பருடன் மனைவி போட்ட பிளான் - சோகத்தில் முடிந்த சம்பவம்

சுருக்கம்

கர்நாடக மாநிலம் மண்டியாவில் நடைபெற்ற சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் மண்டியா பகுதியை சேர்ந்தவர் மகேஷ். இவருக்கு வயது 30 ஆகும். இவருக்கும் 27 வயதான ஷில்பா என்ற பெண்ணுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது. மகேஷ் -ஷில்பா தம்பதி கோனேகுண்டே என்ற பகுதியில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், ஷில்பாவுக்கு ஆண் நண்பர் ஒருவர் இருந்து வந்துள்ளார் என்றும், கணவருக்கு தெரியாமல் அவருடன் ஊர் சுற்றியதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் செய்திகளுக்கு..செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

ஒருகட்டத்தில் இந்த விவகாரம் கணவர் மகேசுக்கு தெரியவர, இருவருக்கும் சண்டை நடைபெற்றுள்ளது. மனைவி ஷில்பா அவர் என்னுடைய நண்பர் தான், எங்களுக்குள் தவறாக எந்தவிஷயமும் இல்லை என்று கூறியுள்ளார்.இதனால் மகேஷ் ஓரளவு சமாதானம் அடைந்தாலும், இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக சண்டை நடைபெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில்  மனைவி ஷில்பா ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனை கொல்ல திட்டம் தீட்டியிருக்கிறார். அதன்படி, கடந்த 2 ஆம் தேதி தன்னுடைய ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனை கழுத்தை நெரித்து ஷில்பா கொலை செய்துள்ளார். பின்னர், வலிப்பு நோயால் கணவர் உயிரிழந்துவிட்டதாக மகேஷின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.கார் மூலம் சடலத்தை மண்டியாவுக்கு எடுத்துச் சென்றுள்ளார். 

மேலும் செய்திகளுக்கு..Cyrus Mistry : டாடாவின் வாரிசு முதல் டாடா சன்ஸை நீதிமன்றத்துக்கு இழுத்தவர் வரை.! யார் இந்த சைரஸ் மிஸ்திரி ?

பெற்றோர் வந்து பார்த்த போது மகேஷின் கழுத்து பகுதியில் காயங்கள் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர்கள் மண்டியா காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். போலீசார் மகேஷின் மனைவி ஷில்பாவிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, ‘திருமணத்திற்கு முன்பே ஒருவரை காதலித்ததாகவும், அவரை திருமணம் செய்ய பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதனால் பிறகு மகேஷை திருமணம் செய்து வைத்ததாகவும், அவருடன் வாழ விரும்பாததால் காதலுடன் சேர்ந்து கணவரை கொலை செய்தேன்’ என்று ஒப்புக்கொண்டார் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஷில்பாவையும், அவளது ஆண் நண்பரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..ரசிகர்களை சந்திக்கும் ரஜினி..அரசியல் பிளானும் இருக்கும் போலயே - ஜெயிலர் டூ அரசியல்.!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சினிமா மிஞ்சும் திகில்.. காட்டிக்கொடுத்த காலி மதுபாட்டில்கள் பார் கோடுகள்.. பெண் கொலை வழக்கில் ஓய்வு பெற்ற காவலர் கைது
அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!