கார் குண்டு வெடிப்பு..!சதிக்கு திட்டம் தீட்டியது எப்படி..? இரண்டாவது நாளாக கோவையில் என்ஐஏ விசாரணை..!

By Ajmal KhanFirst Published Dec 26, 2022, 3:14 PM IST
Highlights

 கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் 5 பேரிடம் என்ஐஏ போலீசார் கோவைக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்ட நிலையில், இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடத்தினர்.

கார் குண்டு வெடிப்பு- என்ஐஏ விசாரணை

கோவை  கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவம்  தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி ஜமேஷா முபின் உயிர் இழந்ந நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 9 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.  தமிழக போலீசார் கோவை கார் குண்டு வெடிப்பை விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை என்ஐஏ போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதனையடுத்து குற்றவாளிகளில் உக்கடம் ஜிஎம் நகர் பகுதியை சேர்ந்த முகமது அசாருதீன், முகம்மது ரியாஸ்,பிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் மற்றும் அப்சல்கான் ஆகிய 5 பேரை  NIA அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சதிக்கு திட்டமிட்டது எப்படி.? 

நேற்று கோவை  உக்கடம், பிலால் எஸ்டேட், புல்லுக்காடு ஆகிய பகுதிகளில் குற்றவாளிகள் 5 பேரை அழைத்து சென்று விசாரணை நடத்தினர். ஐந்து பேரையும் NIA அதிகாரிகள் உக்கடம் கோட்டைமேடு உள்ளிட்ட இடங்களுக்கு நேரில்  அழைத்து வந்து  விசாரணையில் ஈடுபட்டனர். வீடுகளுக்குள் செல்லாமல் சாலைகளில் வைத்து  சில கேள்விகள் எழுப்பி விசாரணை மேற்கொண்டு அவர்களை அழைத்து சென்றனர். இன்று பெரிய கடைவீதி காவல் நிலையத்திற்கு உட்பட்ட அன்பு நகர் பகுதியில் விசாரணை நடத்தினர். அப்போது கார் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு எப்படி திட்டமிடப்பட்டது, எங்கே இருந்து குண்டுகளை கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

இதையும் படியுங்கள் 

பொங்கலுக்கு ரூ. 5000கொடுங்கள்..! அப்போ ஸ்டாலின்..! இப்போ இபிஎஸ்.! இது தான் திராவிட கட்சிகளின் சாதனை- சீமான்

click me!