மகன் அஜய்-யையே பால் பாக்கெட் வாங்கி வரச்சொல்லி விஷம் கலந்து கொடுத்த அபிராமி!! அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்...

Published : Sep 08, 2018, 12:06 PM ISTUpdated : Sep 09, 2018, 07:28 PM IST
மகன் அஜய்-யையே பால் பாக்கெட் வாங்கி வரச்சொல்லி விஷம் கலந்து கொடுத்த அபிராமி!! அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி  தகவல்கள்...

சுருக்கம்

முறையற்ற காதலால் வாழ்க்கையை தொலைத்ததோடு மட்டுமல்லாமல் தமிழகத்தையே பெரும்அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளார் புழல் சிறையில் உள்ள அபிராமி. 

முறையற்ற காதலால் வாழ்க்கையை தொலைத்ததோடு மட்டுமல்லாமல் தமிழகத்தையே பெரும்அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளார் புழல் சிறையில் உள்ள அபிராமி.  கணவர் விஜயும் தற்போது பித்துபிடித்தவர்போல் இருக்கிறாராம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அழைத்து அவருக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, குன்றத்தூர் பகுதி இளைஞரணி கட்சி பதவியையும் அளித்துள்ளார். 

இந்த நிலையில், பல்வேறு பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் தொடர்ந்து அபிராமி குறித்த செய்திகள் மற்றும் பின்னணி தகவல்களை சேகரித்து வருகின்றன.

 அதன்படி அபிராமி விஜய் தம்பதியினர் வசித்த குன்றத்தூர், மூன்றாம் கட்டளை பகுதியில் உள்ள அங்கனீஸ்வரர் தெருவில் உள்ள அக்கம்பக்கத்தினரிடமும் அங்குள்ள கடைக்காரர்களிடமும் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து நடந்தது என்ன என கேட்டு செய்திகள் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், அதே தெருவில் வசித்து வருபவரும், சில மாதங்களுக்கு முன்பு வரை அபிராமிக்கு நெருங்கிய தோழியாகவும் இருந்த பெண் ஒருவர் பல அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பிரியாணிக்காரன் சுந்தரத்தின் நட்பு கிடைத்தவுடன் தெருவில் அனைவரிடமும் மனம் விட்டு, அதே நேரத்தில் ஜாலியாகவும் பேசி நட்பு பாராட்டி வந்த அபிராமி, திடீரென அனைவரது நட்பையும் கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்தாராம்... ஒரு கட்டத்தில் சுத்தமாக பேசுவதையே நிறுத்திவிட்டாராம்.

சம்பவம் நடைபெற்ற அன்று சில மணி நேரங்களுக்கு முன்பு அபிராமியால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்ட தனது மகன் அஜயை அனுப்பி பால் பாக்கெட் வாங்கி வரச்செய்து, அந்த குழந்தை வாங்கி வந்த பாலிலேயே விஷத்தை கலந்து வைத்து அவர்களை  கொன்றதுதான் கொடுமையிலும் கொடுமை என வேதனையோடு அந்த பெண்மணி தெரிவித்ததாக செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

அட பாவிங்களா... ரூ.3 கோடி பணம்.. அரசு வேலைக்காக பாம்பை ஏவி தந்தை கொ**.. மகன்களின் சதி அம்பலமானது எப்படி?
காலி பாட்டிலுக்காக 5 ரூபாய் தகராறு.. பட்டப்பகலில் 3 குழந்தைகளின் தந்தை ஓட ஓட விரட்டி கொ**..! தூத்துக்குடியில் பயங்கரம்