மது போதையில் ஓங்கி அடித்த கணவன்.. மனைவி செய்த விபரீத சம்பவம் - வெளியான அதிர்ச்சி காரணம்.!

By Raghupati R  |  First Published Jul 20, 2022, 3:39 PM IST

மது போதையில் இருந்த கணவணை பனியன் துணியால் கழுத்தை இறுக்கி மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


சென்னையில் வசித்து வருகின்றனர் சரவணன் - முத்துலட்சுமி தம்பதியினர். இந்த தம்பதிக்கு திவ்வியபாரதி, தனலட்சுமி, சூர்யா என 3 பிள்ளைகள் உள்ளனர். ராயபுரத்தில் உள்ள எம்.சி ரோட்டில் சாலையோரம் துணி வியாபாரம் செய்துவரும் சரவணன் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியை அடிப்பது வழக்கம் என்று கூறப்படுகிறது.

Tap to resize

Latest Videos

இந்நிலையில் நேற்று காலை குடிபோதையில் இருந்த சரவணன் மனைவி முத்துலட்சுமியிடம் தஞ்சாவூரில் உள்ள உனது சொத்தை பிரித்து பணத்தை பெற்றுக்கொண்டு வா என்று கூறி மனைவியை அடித்து துன்புறுத்தி ஆடைகளை கழற்றி அடித்து, வீட்டை விட்டு வெளியே போய் விடு என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முத்துலட்சுமி போதையில் இருந்த கணவன் சரவணனை பனியன் துணியால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..எங்க பொண்ணோட கையெழுத்து இல்லை.. ஸ்ரீமதி பெற்றோர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்

பிறகு என்ன செய்வதென்று தெரியாத முத்துலட்சுமி சரவணன் தம்பி சாமிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த சாமி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முத்துலட்சுமியிடம் போலீசார் விசாரித்தபோது  என் கணவர் தஞ்சாவூரில் உள்ள என் சொத்தை விற்று பணத்தை கொண்டு வா என்று கூறினார்.

இதனால் தினமும் குடித்துவிட்டு வந்து தன்னை கொடுமைப்படுத்தி வந்தார். நேற்று அத்துமீறி எனது ஆடைகளை கழட்டி நிர்வாணமாக்கி வீட்டை விட்டு வெளியே போ என்று கூறியதால் ஆத்திரமடைந்த நான் பனியனால் அவர் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டேன் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து முத்துலட்சுமியை போலீசார் கைது செய்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..போக்குவரத்து ஊழியர்கள் ஸ்ட்ரைக் அறிவிப்பு.! எப்போது தெரியுமா ?

click me!