உங்கள் எம்.பி கெஸ்ட் அவுசுக்கு அழைத்துச் சென்று பலமுறை உடலுறவில் ஈடுபட்டார்.. முதல்வரிடம் கதறும் துபாய் பெண்

By Ezhilarasan BabuFirst Published Jul 20, 2022, 2:13 PM IST
Highlights

தன்னை பலமுறை டெல்லியிலுள்ள எம்.பிக்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்று  உடலுறவில் ஈடுபட்டதாக சிவசேனா எம்பி ராகுல் ஷெவாலே மீது துபாயை சேர்ந்த இளம்பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.

தன்னை பலமுறை டெல்லியிலுள்ள எம்.பிக்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்று  உடலுறவில் ஈடுபட்டதாக சிவசேனா எம்பி ராகுல் ஷெவாலே மீது துபாயை சேர்ந்த இளம்பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ளார். மேலும் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தனக்கு நீதி கிடைக்க உதவ வேண்டும் என்றும் அந்தப் பெண் ட்விட் செய்துள்ளார்.

மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள அரசியல் களேபரம் இன்னும் ஓயவில்லை, சிவசேனா கட்சி இரண்டாக உடைந்தது ஏக்நாத் ஷிண்டே ஆட்சி கைப்பற்றியுள்ளார், இதனால் அம்மாநிலத்தில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது, அதற்குள் மற்றொரு அதிர்ச்சி சம்பவமாக அம்மாநில முக்கிய எம்.பி மீது 32 வயதான பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார். இது சிவசேனா கட்சிக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிவசேனா எம்பி ராகுல் ஷெவாலே மீது துபாய் நாட்டைச்சேர்ந்த  பெண் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வுக்கு பல்வேறு புகார்களை கூறி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில்,  ஐயா நான் உங்களிடம் நீதி கேட்கிறேன், உங்கள் கட்சியின் எம்பி ராகுல் ஷெவாலே என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியுள்ளார். இதுவரை பலமுறை டெல்லியிலுள்ள எம்பிக்கள் இல்லத்திற்கு அழைத்துச் சென்று என்னுடன் உடலுறவு மேற்கொண்டுள்ளார்.

நான் துபாயில் இருந்து வரும் போதெல்லாம் அவசியம் என்னை இரவு விருந்துக்கு அழைக்கும் அவர் என்னுடன் உல்லாசத்தில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார், இந்நிலையில் நான் அவருடன் தங்கியிருந்த  வீடியோ ஒன்றை எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டதற்காக, என்மீது அவர் ஷார்ஜா போலீசில் புகார் கொடுத்தார். அதில் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நான் கைது செய்யப்பட்டேன்.

78 நாட்கள் சிறையில் இருந்தேன், தற்போதைய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு இருக்கிறேன், என்னை திருமணம் செய்து கொள்வதாக மோசடி செய்த ராகுல் ஷெவாலே மீது நான் மும்பையில் உள்ள சகி நாகா காவல்நிலையத்தில் புகார் கொடுத்தேன், ஆனால் ஷெவாலேவுக்கு உள்ள அரசியல் செல்வாக்கு காரணமாக போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்ய மறுக்கின்றனர், எனவே நீங்கள்தான் எனக்கு நீதி வழங்க வேண்டும் என அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார். 

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிவசேனா எம்பி ராகுல் ஷெவாலே, ஜவுளி வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் பெண் ஒருவர் தன் மீது அவதூறாக புகார் கொடுத்து தன்னை மிரட்டி பணம் பறித்தல், மோசடியில்  ஈடுபட்டு வருகிறார், அவர் மீது கொடுத்த புகாரின் பேரில் சகி நாகா போலீசார் அந்தப் பெண்ணுக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

அதேபோல் அந்தப் பெண் மீது நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது, அந்தப் பெண் தனது தொழிலுக்கு நிதி உதவி செய்வதாகக் கூறி தன்னை அணுகியதாகவும், ஆனால் இறுதியில் தன் மீது அவதூறாக குற்றச்சாட்டு கூறி, தன்னை  மிரட்டி பணம் பறிக்க ஆரம்பித்ததாகவும், மேலும் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு திருமணம் செய்து கொள்ளும்படி நிர்பந்திப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ராகுல் ஷெவாலே மனைவி காமினி ஷெவாலே அந்தப்பெண்ணின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதுடன், தனது கணவருக்கு எதிராக அந்தப்பெண் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றது என்றும் கூறியுள்ளார். எம்பி ராகுல் ஷெவாலேவின் அரசியல் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் அந்தப்பெண் செயல்பட்டு வருவதாகவும், எனவே அந்தப் பெண் மீது எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என மும்பை போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 

click me!