முட்டாள் கொலைகாரியாகிப் போன அபிராமி !! கொடூரன் சுந்தரத்தின் பேச்சைக் கேட்டு ஏமாந்த கொடுமை

By sathish kFirst Published Sep 5, 2018, 11:25 AM IST
Highlights

சென்னை குன்றத்தூர் பகுதியை சேர்ந்த அபிராமி எனும் பெண் தன்னுடைய குழந்தைகளே தானே கொன்ற விவகாரம் பொது மக்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. 

சென்னை குன்றத்தூர் பகுதியை சேர்ந்த அபிராமி எனும் பெண் தன்னுடைய குழந்தைகளே தானே கொன்ற விவகாரம் பொது மக்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. சமூக வலைதளங்களில் கூட கள்ள காதலுக்காக குழந்தைகளை கொலை செய்த அபிராமியை அனைவ்ருமே திட்டி தீர்த்து வருகின்றனர். பொதுவாக ஒவ்வொரு கொலைக்கும் கொலையாளியின் தரப்பில் ஒரு காரணம் இருக்கும். 

அபிராமியின் செய்திருக்கும் இந்த கொலையில் அவரது முட்டாள் தனம் கூட ஒரு காரணம் தான்.
சின்னஞ்சிறு குழந்தைகளை கொலை செய்தது மன்னிக்கமுடியாத குற்றமே. இப்படி ஒரு குற்றத்தை செய்யும் படி அபிராமியை தூண்டியது எது? 2 மாதங்கள் மட்டுமே பழகிய சுந்தரத்தின் பேச்சை கேட்டு  தான் பெற்ற குழந்தைகளையே கொல்லுமளவிற்கு அவரை கொண்டு சென்றது எது? அபிராமி சுந்தரத்திற்காக எதையும் செய்ய துணிந்திருக்கிறார் என்றால் காமம் மட்டுமே தான் அதற்கு காரணமா? என பல கேள்விகள் இந்த இடத்தில் எழுகிறது.

சமூக வலைதளங்களில் அபிராமியை திட்டி இருப்பவர்கள் கூட , ஓடிப்போவது என முடிவெடுத்த பிறகு அபிராமி தனியாக போக வேண்டியது தானே? எதற்கு இந்த பிஞ்சு குழந்தைகளை கொல்ல வேண்டும்? என கேள்ஈ எழுப்பி இருந்தனர். ஆனால் அபிராமி முதலிலேயே தனது குடும்பத்தை உதறிவிட்டு சுந்தரத்துடன் வாழ சென்றுவிட்டார். அவரின் கணவர் தான் மீண்டும் கெஞ்சி கேட்டு அவரை வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார்.
இதனால் தான் தாங்கள் இங்கிருந்து தப்பி செல்ல வேண்டும் என்றால் அதற்கு தடை இந்த மூவரும் என நினைத்து மூவரையும் கொல்ல திட்டம் போட்டு கொடுத்திருக்கிறார் சுந்தரம். 

சுந்தரம் மட்டுமே முக்கியம் என்று முட்டாளாக இருந்த அபிராமியும் விளைவுகள் குறித்து சிந்திக்காமல் இந்த கொடூரத்தை நிகழ்த்தி விட்டு இப்போது சிறையில் வேதனைபட்டு கொண்டிருக்கிறார்.
 அபிராமிக்கும் அவர் கணவருக்கும் இடையேயான திருமணம் காதல் திருமணம் தான். ஆனாலும் அது இப்படி மோசமாக  முடிந்தது ஏன்? காதல் என்பது ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே நிலையில் நிலைத்திருக்க வேண்டும் என்றால், அதற்கு கணவன் மனைவி இருவரின் பங்கும் சரிசமமாக இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் அபிராமியின் கணவர் தரப்பிலும் தவறு இருக்க தான் செய்கிறது. 

பொதுவாகவே ஒரு பெண் திருமணம் முடிந்துவிட்டால் , கணவன்  , குழந்தைகள் என்று அவர்களுக்காகவே வாழ வேண்டும் என்றாகிவிடுகிறது. அழகான குடும்பத்தை ரசித்து வாழ்வதோ விட்டு செல்வது அது அவரவரின் தேர்வு தான். ஒருவேளை இது போன்ற வாழ்க்கையை அவர் வாழ விரும்பவில்லை எனும் பட்சத்தில் அவருக்கு விலகி செல்ல இங்கு அனுமதி கிடைப்பதில்லை. ஒருவேளை அப்படி அனுமதித்தால் கலாச்சாரம் கெட்டுவிடாதா? என கேட்பவர்களுக்கு ஒரே பதில்… இது போன்ற கொலைகளை விட மோசமானதாக அது இருக்காது என்பது தான்.
அதிலும் அபிராமியின் விஷயத்தில் அவர் தன் குடும்பத்துடன் இருந்த போதும் கூட ஒரு வித தனிமையை உணர்ந்திருக்கிறார். 

அந்த வெற்றிடத்தை சுந்தரம் பயன்படுத்தி கொண்டிருக்கிறார் அபிராமிக்கு அவரின் செயல் குறித்து எடுத்து சொல்லி  , அறிவுரை வழங்கும் அளைவிற்கு யாரும் அவருடன் இல்லை என்பதும் கூட இதற்கெல்லாம் ஒரு காரணம் தான். தனிக்குடித்தனம் என்ற பெயரில், அக்கம் பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார் என்று கூட தெரியாத அப்பார்ட்மெண்ட் வாழ்க்கையில், சுயக்கட்டுப்பாடும் இல்லாமல் போகும் போது, இது மட்டுமல்ல இன்னும் பல் கோரங்களையும் சந்திக்க நேரிடலாம். 

click me!