ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவன பிளாட்டில் தொழிலாளி திடீர் பலி..! போலீசார் விசாரணை

By Ajmal KhanFirst Published Apr 26, 2023, 7:52 AM IST
Highlights

ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு  சொந்தமான சைட்டில் உள்ள கட்டிடத்தின் தண்ணீர் தொட்டியில் விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஜி ஸ்கொயர்- வருமான வரி சோதனை

தென்  மாநிலங்களில் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜீ ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரி சோதனையானது 3 வது நாளாக நடைபெற்று வருகிறது. 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நீடித்து வரும் நிலையில் கோவை மாவட்டம் சூலூரில் உள்ள அந்த நிறுவனத்துக்கு சொந்தமான பிளாட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றி வந்த ஹரி என்பவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்டிடத்தில் வேலை செய்யும் சகத் தொழிலாளர்கள்  தண்ணீர் எடுப்பதற்காக தொட்டியில் இருந்த டியூப்பை எடுத்துள்ளனர். வெளியே எடுக்கும்போது கடினமாக இருந்துள்ளது இதனை அடுத்து 2 தொழிலாளர்கள் சேர்ந்து டியூப்பை வெளியே எடுத்துள்ளனர். அப்போது உள்ளே சக தொழிலாளியான ஹரி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து இறந்து இருப்பது தெரியவந்தது. 

கட்டிட தொழிலாளி பலி

இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  கூலி தொழிலாளியான ஹரி, கேரள மாநிலத்தை சேர்ந்தவர், கடந்த  6 மாதங்களாக இந்த கட்டிடத்தில் கட்டிட பணியாற்றி வருகிறார். இரவு கட்டிடத்தில் பணியை முடித்துவிட்டு கட்டிடத்தின் முன்பு உள்ள தண்ணீர் தொட்டி அருகே அமர்ந்து ஹரி மது அருந்தியதாக கூறப்படுகிறது.  அப்போது மது போதையில்  தவறி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து அவர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. தமிழக முழுவதும் ஜீ ஸ்கொயர் நிறுவனத்திற்கு  சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், அந்த நிறுவனத்துக்கு சொந்தமான பிளாட்டில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்திருப்பது  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்

G Square : ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் இரண்டாவது நாளாக தொடரும் சோதனை..! முக்கிய ஆவணங்கள் சிக்கியதா.?

click me!