நீலகிரிமாவட்டம் ஊட்டியில் 14 வயது பழங்குடியின சிறுமியை உறவினர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உதகை அருகே பகல்கோடு மந்து பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற சிறுமி மாலை வீடு திரும்புவதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்துள்ளார். அப்போது அவ்வழியே காரில் சென்ற அவரது உறவினரான ராஜேஷ்குட்டன் என்பவர், சிறுமியை வீட்டில் விடுவதாக கூறி அழைத்து சென்றுள்ளார். பைக்காரா சாலை வழியே சென்ற அவர் வனப்பகுதிக்குள் வைத்து சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சிறுமி தன்னை வீட்டில் காட்டிக்கொடுத்து விடுவார் என்று அச்சமடைந்த ராஜேஷ் குட்டன், காரில் இருந்த இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் சிறுமியை அடித்து துடிதுடிக்க கொன்றுள்ளார். பின்னர் சிறுமியின் உடலை அங்கேயே போட்டுவிட்டு காரில் அதிவேகமாக பயணித்த அவரை பொதுமக்கள் தடுத்து நிறுத்திய நிலையில், காரை விட்டு அவர் தப்பியோடிவிட்டார்.
முன்விரோதம் காரணமாக புதுமாப்பிள்ளைக்கு சரமாரி அரிவாள் வெட்டு; சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
இதனிடையே சிறுமி வீடு திரும்பாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அருகே உள்ள இடங்களில் தேடி பார்த்தனர். பின்பு பைக்கார காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிந்து சிறுமியின் உடலை மீட்டு ஊட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பறிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தப்பியோடிய ராஜேஷ்குட்டனை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
நாமக்கல்லில் தண்ணீர் என நினைத்து தின்னரை குடித்த 3 வயது குழந்தை உயிரிழப்பு