சென்னையில் தொடரும் ’வலிமை’ சம்பவங்கள்.. பெண்கள் ‘பகீர்..’ கவனிக்குமா காவல்துறை ?

Published : Mar 21, 2022, 01:28 PM IST
சென்னையில் தொடரும் ’வலிமை’ சம்பவங்கள்.. பெண்கள் ‘பகீர்..’ கவனிக்குமா காவல்துறை ?

சுருக்கம்

வலிமை படத்தில் வருவது போல், பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவம் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மூதாட்டியிடம் 'சங்கிலி' பறிப்பு :

சென்னை கொண்டித்தோப்பு ஜிந்தாசாகிப் தெருவில் வசித்து வருபவர் ரத்னா தேவி(59). இவர் கடந்த மாச்ர் 17ம் தேதியன்று மதியம் 1.10 மணியளவில் ஏழுகிணறு பகுதியில் உள்ள பெத்து நாயக்கன் தெரு வழியே நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த ஒருவர் ரத்னா தேவியின் கழுத்தில் அணிந்திருந்த 1 1/4 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றிருக்கிறார்.

இது தொடர்பாக ஏழுகிணறு காவல் நிலையத்தில் ரத்னா தேவி புகாரளித்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. போலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். பின்னர் மூதாட்டியின் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றது மண்ணடியைச் சேர்ந்த முகமது ஃபைசல்(22) என்ற இளைஞன் என தெரிய வந்தது.

'வலிமை' பட சம்பவம் :

இதனையடுத்து செயின் பறிப்பில் ஈடுபட்ட ஃபைசலை கைது செய்து அவரிடமிருந்து மூதாட்டியின் ஒன்றேகால் சவரன் தங்கச் செயின் மற்றும் 1 இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட முகமது ஃபைசல் மீது ஏற்கெனவே கொரட்டூர் காவல் நிலையட்தில் இதேபோன்ற சங்கிலி பறிப்பு வழக்கு உள்ளது தெரிய வந்தது. பின்னர் முகமது ஃபைசலை சிறையில் அடைத்திருக்கிறார்கள். வலிமை படத்தில் வருவது போல 'சங்கிலி' பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!