தாலி கட்டுற நேரத்துல இப்படியா பண்றது ? திடீர் 'பல்டி' அடித்த மணமகள்.. பாவம்யா மாப்பிள்ளை !!

Published : Apr 21, 2022, 12:35 PM IST
தாலி கட்டுற நேரத்துல இப்படியா பண்றது ? திடீர் 'பல்டி' அடித்த மணமகள்.. பாவம்யா மாப்பிள்ளை !!

சுருக்கம்

கேரள மாநிலம் கொல்லம் அருகே மண்துருத்தி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் , கல்லுநாகம் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் குடும்பத்தினரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. 

இருவருக்கும் குறித்த நாளில் இரட்டகுளங்கரை பகுதியில் உள்ள கோவில் மண்டபத்தில் திருமணம் நடக்க இருந்தது. மணமேடையில் மணமகனும் மணப்பெண்ணும் தயாராக இருந்தனர். மணமகன் மாலையை எடுத்து மணமகளுக்கு அணிவிக்க போனார். திடீரென மாப்பிள்ளையை மணப்பெண் தடுத்து நிறுத்தி மணமேடையில் இருந்து கீழே இறங்கி ஓடிவிட்டார். உறவினர்கள், குடும்பத்தினர் எதுவும் புரியாமல் மணமகளை தடுத்து நிறுத்த முயன்றனர்.

ஆனால்,மணப்பெண் ஒரு ரூமுக்குள் சென்று உள்பக்கமாக பூட்டிக்கொண்டார். எவ்வளவோ தட்டியும் அந்த பெண் கதவை திறக்கவில்லை. இதனை அடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. போலீசார் விரைந்து வந்து பெண்ணை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போதுதான், மணமகளின் காதல் விவகாரம் வெளியே தெரியவந்தது. இன்னொரு நபரை காதலிப்பதாகவும், பெற்றோரின் கட்டாயத்தில் தான் இந்த திருமணத்துக்கு சம்மதித்ததாகவும் அந்த பெண் போலீசாரிடம் கூறினார். 

பிறகு, இரு வீட்டாரையும் அழைத்து போலீசார் சமாதானம் செய்தனர். ஆனால் அப்போதும், மணப்பெண் பிடிவாதமாக திருமணம் வேண்டாம் என்று உறுதியாக சொல்லிவிட்டார். இறுதியாக, பெண்வீட்டார் மணமகன் வீட்டாருக்கு நஷ்டஈடு கொடுக்க ஒப்புக் கொண்டதையடுத்து, மண்டபத்தில் இருந்து அனைவரும் வெளியேறி ஆரம்பித்தனர். 

அப்போது போலீசார் கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்றால், முதலிலேயே சொல்லி இருக்க வேண்டும், சம்பந்தமில்லாத இளைஞரை மணமேடை வரை அழைத்து வந்து இப்படியெல்லாம் அசிங்கப்படுத்த கூடாது என்று மணப்பெண்ணுக்கு அட்வைஸ் தந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க : ”இந்திய அரசின் ட்ரோன்களை தயாரிக்க தேர்வானது நடிகர் அஜித்குமாரின் தக்‌ஷா குழு.." AK ரசிகர்கள் கொண்டாட்டம் !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!