அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம் ..ஆப்ரேஷன் தியேட்டரில் கிடந்த மர்ம சடலம்.. விசாரணையில் பகீர்..

Published : Apr 21, 2022, 12:21 PM ISTUpdated : Apr 21, 2022, 12:28 PM IST
அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம் ..ஆப்ரேஷன் தியேட்டரில் கிடந்த மர்ம சடலம்.. விசாரணையில் பகீர்..

சுருக்கம்

அரசு மருத்துவமனை ஆப்ரேஷன் தியேட்டரில் மர்மமான முறையில் அழகிய நிலையில் இறந்து கிடந்த முதாட்டியின் சடலத்தை மீட்ட போலீசார், விசாரணை முடுக்கியுள்ளனர்.      

அரசு மருத்துவமனை ஆப்ரேஷன் தியேட்டரில் மர்மமான முறையில் அழகிய நிலையில் இறந்து கிடந்த முதாட்டியின் சடலத்தை மீட்ட போலீசார், விசாரணை முடுக்கியுள்ளனர்.    திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் கடந்த சில தினங்களாக பூட்டிக் கிடந்த அறுவை சிகிச்சை அறையில் இருந்து கடுமையான தூர்நாற்றம் வீசியுள்ளது. இதனை தொடர்ந்து, மருத்துவமனையில் பிற வார்டுகளில் சிகிச்சையில் இருந்த நோயாளிகள், நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். இதனால் அறுவை சிகிச்சை அறையை திறந்து பார்த்தபோது, மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

அங்கு சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. இதனை கண்டு பதற்றமடைந்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சை அறைக்கும் எப்படி சடம் வந்தது என்று குழப்பி போனர். பின்னர்,  மணச்சநல்லூர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்ததையடுத்து, விரைந்து வந்த போலீசார், சடலத்தை மீட்டு பிரதேச பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இதுக்குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மருத்துவமனைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிரா காட்சிகள் மற்றும் காணாமல் போனவர்கள் பட்டியலை கொண்டு விசாரணையை முடுக்கினர். பின்னர்  அறுவை சிகிச்சை அறையில் அடையாளம் தெரியாத அளவிற்கு சிதைந்து, அழகிய நிலையில் கிடந்த சடலம் குறித்து தகவல் கிடைத்தது. அதன்படி ,அவர் மணச்சநல்லூர் மிஷின் தெருவைச் சேர்ந்த சிவபாக்கியம். இவர் மணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் கூட்டி பெருக்கும் வேலை செய்து வந்துள்ளார்.

இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று சொல்லப்படுகிறது. கடந்த வாரம் மருத்துவமனையில் ஆபரேஷன் தியேட்டரை சுத்தம் செய்யப் போனவர், உடல்நிலை சரியில்லாமல் அங்கு மயங்கி விழுந்து இறந்து போயிருக்கலாம் என்று காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால் உள்ளே ஒருவர் மயங்கி விழுந்து கிடப்பதை அறியாமல் அறுவை சிகிச்சை அறையை பூட்டி வைத்துள்ளனர். துர்நாற்றம் வீசுவதாக நோயாளிகள் புகாரளித்த பின்னரே, இந்த அவல நிலை தெரியவந்துள்ளது. 

மருத்துவ நிர்வாகத்திலிருந்து யாரும் ஒருவாரம் வரை அந்த அறுவை சிகிச்சை அறையை எட்டிப் பார்க்காமல் இருந்தது ஏன்?  இறந்து கிடந்த அந்த மூதாட்டி எதற்காக அறுவை சிகிச்சை அரங்கினுள் சென்றார்? இவரது மரணத்தில் ஏதேனும் மர்மம் இருக்குமா? என பல்வேறு கோணங்களில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுக்குறித்து பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு தான் இறப்பிற்கான காரணங்கள் என்னவென்று தெரியவரும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!